திபெத்தில் நெடுஞ்சாலையின் கட்டுமானம்
cri
திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தில், தற்போது 70 விழுக்காட்டுக்கு அதிகமான கிராமங்களில், நெடுஞ்சாலைப் போக்குவரத்து உண்டு. இது, விவசாயிகள்-ஆயர்களின் வாழ்க்கைக்கும் வேளாண் மற்றும் துணைப் பொருட்களின் விற்பனைக்கும் வசதி வழங்கியுள்ளது.
50 ஆண்டுகளுக்கு முன், Si chuan-திபெத் நெடுஞ்சாலை மற்றும் சின் காய்-திபெத் நெடுஞ்சாலை கட்டியமைக்கப்பட்டது முதல், திபெத்தில் போக்குவரத்துக்கான நெடுஞ்சாலையின் மொத்த நீளம் 41 ஆயிரம் கிலோமீட்டரை எட்டியுள்ளது.
இவ்வாண்டு திபெத்தில், நெடுஞ்சாலை கட்டுமானத்துக்கான முதலீடு, 360 கோடி யுவானை எட்டும். விவசாயிகள் மற்றும் ஆயர்கள் நெடுஞ்சாலைக் கட்டுமானத்தில் கலந்து கொள்வதால், 40 கோடி யுவான் வருமானம் அதிகரிக்கக்கூடும்.
|
|