நல வாழ்வு பாதுகாப்பு நிகழ்ச்சி பற்றிய கருத்துக்கள்.
புதுச்சேரி, P.ஜெயச்சந்திரன்
இந்த நிகழ்ச்சி மூலம், நீண்ட நேரத் தூக்கம் உடம்பிற்கு எந்த வகையில் கேடுவிளைவிக்கிறது என்பதை அறிய முடிந்தது.
வளவனுர் புதுப்பாளையம் எஸ்.செல்வம்
பூண்டின் மருத்துவப் பயன் பற்றிய கட்டுரையைக் கேட்டேன். நன்றாக இருந்தது. பூண்டு மகத்தான பொருள் தான். மனித குலம், பயன் பொறுவதற்காகத் தோன்றிய அற்புதப் படைப்புக்களில் பூண்டும் ஒன்றாகும்.
மோப்பிரிபாளையம், B.தங்கராஜ்
செஞ்சி, P.வின்சன்ட்
முதியவர்களுக்கான எளிய மருத்துவ முறைகள், உடற்பயிற்சிகள் என, பல்வேறு தகவல்களும் மிகவும் பயனுள்ளவை. தொடரட்டும். மாசேதுங்கின் உடல் ஆரோக்கியம் பற்றிய கட்டுரையில், உடலை எவ்வாறு ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது என்று பல கருத்துக்கள் இடம்பெற்றன. தேனீர் அருந்துவது உடலுக்கும், இதயத்துக்கும் நல்லது என்பது கருத்தில் கொள்ளத்தக்கது.
ராமியம்பட்டி, எஸ்.பாரதி
முதியோர் விரும்பும் உடற்பயிற்சி பற்றிக் கேட்டேன். பயனுள்ள குறிப்புகள்!ஐயமே இல்லை.
1 2
|