|
|
(GMT+08:00)
2004-06-26 20:05:00
|
எண்ணெய் சேமிப்பு திட்டம்
cri
சீனாவின் நெடுநோக்கு திட்டமான எண்ணெய் சேமிப்பு தளக் கட்டுமானத்தின் முதலாவது கட்ட திட்டப்பணி பன்முகங்களிலும் துவங்கியுள்ளது. இந்நெடுநோக்கு திட்டத்துடன் தொடர்பான சட்ட விதியும் நிர்வாக வழிமுறையும் தற்போது வகுக்கப்பட்டு வருகின்றன. சீனத் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த கமிட்டியின் எரியாற்றல் ஆய்வகத்தின் அதிகாரி ஒருவர் அண்மையில் ஒரு கருத்தரங்கில் இதைத் தெரிவித்தார்.
சீனாவின் கடலோர பிரதேசத்திலுள்ள தா லியன், ஹுவான் தாவ், சென் ஹாய், சோ ஷான் ஆகிய இடங்களில் எண்ணெய் சேமிப்பு தளங்களைச் சீனா கட்டியமைத்துள்ளது. இத்தளங்களில் சேமிக்கப்பட்ட எண்ணெய் அளவு, 30 நாட்களில் சீனா இறக்குமதி செய்த அளவுக்குச் சமமாகும். பின், புதிய எண்ணெய் சேமிப்பு தளம் சிலவற்றைச் சீனா கட்டியமைக்கும். 2005ஆம் ஆண்டில், சீனாவின் நெடுநோக்கு எண்ணெய் சேமிப்பு அளவு, 90 நாட்களில் இறக்குமதி செய்யப்படும் அளவுக்குச் சமமாகும் என எதிர்ப்பார்க்கப்படும்.
|
|
|