• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-06-28 14:30:44    
ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்பட்டப் போட்டி

cri

கால்பந்து

போர்த்துகல் நாட்டில் நடைபெற்றுவரும் ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்பட்டப் போட்டி, காலிறுதிப் போட்டியில் அடியெடுத்து வைத்துள்ளது.

முதற்சுற்றுப் போட்டியில், 24 ஆட்டம் நடைபெற்றது. 64 கோல் போடப்பட்டது. 8 அணிகள் காலிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளன. இன்னும் 7 ஆட்டம் நடைபெற உள்ளது. ஸ்பெயின், இத்தாலி, ஜெர்மனி ஆகிய வலுவான அணிகள், வெளியேறிவிட்டது பரிதாபமே. முதல் கணக்கில், போர்த்துகல், இங்கிலாந்தை வென்றது. அரையிறுதிக்கு நுழைந்துள்ள முதலாவது அணி போர்த்துகல்.

வழக்கம் போல், டேவிட் பெக்ஹம், பெனால்டி கோல் அடிக்கத் தவறியதால், இங்கிலாந்து வெற்றி வாய்ப்பை இழக்க நேரிட்டது. போர்த்துகல் கோல் கீப்பர் ரிகாட்டோ, 2 பெனால்டியை தடுத்ததுடன், அவரும் பெனால்டி கோல் அடித்து, அணிக்கு வெற்றியை ஈட்டியது குறிப்பிடத்தக்கது.

டென்னிஸ்

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில், சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், அமெரிக்காவின் ஆண்டி ரோடிக், ஆஸ்திரேலியாவின் ஹுவிட், பிரிட்டனின் ஹென்மன், ஆர்ஜென்டினாவின் கொரியா ஆகியோர் வெற்றியுடன் ஆட்டத்தை தொடர்கின்றனர். ரஷியாவின் மாரட் சாபின், ஸ்பெயினின் கோஸ்டா ஆகியோர் தொல்வியுற்றனர்.

மகளிர் பிரிவில், அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ், கிரோஷியாவின் கேரலினாவிடம் நேர் செட் கணக்கில் தோல்வியுற்று, வெளியேறியிருக்கிறார். ஆட்டம் தொடர, தொடர, மேலும் பல முக்கிய தலைகள் உருளக்கூடும் என்று தெரிகிறது.

கோல்ப்

நியுயார்க்கில் கடந்த ஞாயிறன்று நிறைவடைந்த யு.எஸ். ஓபன் கோல்ப் சாம்பியன்பட்டப் போட்டியில், தென்னஆப்பிரிக்காவின் ரெடிப் கூஸன், கோப்பையை வென்றிருக்கிறார். உலகின் முதல்நிலை ஆட்டக்காரரான அமெரிக்காவின் டைகர் வுட்ஸ், தோல்வியைத் தழுவினார். அமெரிக்காவின் பில் மிக்கெல்ஸன், நுலிழையில் கோப்பையை பறிகொடுத்து, இரண்டாமிடம் பெற்றார்.

பார்முலா ஒன்று பந்தயம்

அமெரிக்காவின் இன்டியானா பேலிசில், கடந்த ஞாயிறன்று நடைபெற்ற யு. எஸ். கிராண்ட் பிரி பார்முலா ஒன்று பந்தயத்தில், ஜெர்மனியின் மைக்கேல் ஷுமேக்கர், முதலிடத்தை வென்றார். ஒன்பது பந்தயங்களில், அவர் பெற்ற எட்டாவது வெற்றி இது. பிரேசிலின் பார்செல்லோ இரண்டாம் இடத்தையும், ஜப்பானின் தகுமா சாதோ, மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.

தடகளப் போட்டி

போலந்தின் பைட்காஸெஸ் நகரில் நடைபெற்ற ஐரோப்பிய கோப்பைக்கான கடகளப் போட்டியில், பிரிட்டனின் பாவ்லா ராட்கிலிப், 5000 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தங்கப் பதக்கம் வென்றார். 14 நிமிடம் 29.11 விநாடியில் தூரத்தை ஓடி முடித்தார்.

அமெரிக்காவின் ஆரெகானில் நடைபெற்ற பிரெவான்டைன் பிளாஸிக் தடகளப் போட்டியில், 100 மீட்டர் தடை ஓட்டப் போட்டியில், உலக சாம்பியனான கனடாவின் பென்டிடா, மகளிர் பிரிவில் 12.46 விநாடியில் மிக வேகமாக ஓடி முடித்து, தங்கப் பதக்கம் வென்றார். ஆண்டகளுக்கான 110 மீட்டர் தடையோட்டப் போட்டியில், அமெரிக்காவின் லேரி வேட், 13.14 விநாடியில் தூரத்தை ஓடி முடித்து, முதல் பரிசை வென்றார். மகளிருக்கான நீளத் தாண்டல் போட்டியில், அமெரிக்காவின் மரியான் ஜோன்ஸ், 6.93 மீட்டர் தாண்டி, முதலிடம் பெற்றார்.