கோடைகாலம் வரும் நிலையில், திபெத்தின் சுற்றுலா துறைத் மிகச் சிறந்த நிலையை வரவேற்கிறது. மே திங்கள் இறுதி வரை, திபெத்தில் வருகை தந்த அந்நிய சுற்றுப் பயணிகளின் எண்ணிக்கை 22 ஆயிரத்து எழுநூறு ஆகும்.
1989ஆம் ஆண்டு முதல் 2002ஆம் ஆண்டு வரை, திபெத் வரவேற்ற பயணிகளின் எண்ணிக்கையில் 30 மடங்கு அதிகரிப்பு காணப்பட்டுள்ளது. சுற்றுலாத் துறை, திபெத் பொருளாதார வளர்ச்சியில் ஆதாரத்தூண் தொழில்களில் ஒன்றாகும். 2002ஆம் ஆண்டில், திபெத் தேசிய பொருளாதார ஒட்டு மொத்த மதிப்பில், இத்துறை 6 விழுக்காடு வகிக்கிறது.
சின்சியாங், சிங்காய், கன்சு ஆகிய மாநிலங்கள், சிங்காய் திபெத் இருப்பு பாதையால் திபெத்துடன் இணைக்கப்பட்டு, சீனாவின் மேற்குப் பகுதியில் மிகச் சிறந்த சுற்றுலா வலைப்பின்னலாக மாறியுள்ளது.
|