சீன திபெத்தியல் ஆய்வாளர் மற்றும் வாழும் புத்தர் குழுவின் பயணம்
cri
ஸ்பேயினில் பயணம் மேற்கொண்டு, உலக மத பிரச்சினை கருத்தரங்கில் கலந்து கொள்ளும் வகையில், சீன திபெத்தியல் ஆய்வாளர் மற்றும் வாழும் புத்தர் பிரதிநிதிக் குழு ஜுலை 3ந் நாள் பெஜிங்கை விட்டுப் புறப்பட்டது.
சீன உயர் நிலை புத்தமத கழகத்தின் துணைத் தலைவர் லீ கௌசிங் இக்குழுவுக்குத் தலைமை தாங்குகின்றார். சீன திபெத்தியல் ஆய்வு மையம் மற்றும் திபெத் தன்னாட்சி பிரதேசத்து சமூக அறிவியல் கழகத்தின் ஆய்வாளர்கள், திபெத்தின் வாழும் புத்தர் ஆகியோர் இதில் இடம்பெறுகின்றனர்.
பயணத்தின் போது, தொடர்புடைய வாரியம், கழகங்கள் ஆகியவற்றுடன் இது கருத்தரங்கு நடத்தவுள்ளது. செய்தியாளர் கூட்டத்தை நடத்தவுள்ளது. திபெத்தின் வரலாறு, தற்கால நிலைமை, திபெத்தின பண்பாட்டை முன்னெடுத்துச் சென்று வளர்ச்சியுறச் செய்வது, திபெத் மரபுவழி புத்த மதம் முதலியவற்றை இக்குழு எடுத்து கூறவுள்ளது.
|
|