• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-07-09 10:18:17    
சீனத் தமிழ் ஒலி இதழ் வெளியிடுவது

cri
சீன வானொலி நிலையத்தில் எத்தனை மொழிப் பிரிவுகள் காலை ஒலிபரப்பு நடத்துகின்றன ? என்று 30 பள்ளிப்படி சுப்ரமணியன், கம்பம் ஏ இருதயராஜ், சிறுநாயக்கன்பட்டி கே வேலுச்சாமி உள்பட பலர் கேட்டிருக்கின்றனர்.

சீன வானொலி நிலையத்தில் பல மொழிப் பிரிவுகள் காலை ஒலிபரப்பில் ஈடுபடுகின்றன. தமிழ்ப் பிரிவு போல முதலாவவது ஆசிய பகுதியில் ஹிந்தி, உருது, நேபாளம், சிங்களம் முதலிய மொழிப் பிரிவுகள் காலை ஒலிபரப்பைத் துவக்க உள்ளன. தமிழ்ப் பிரிவு அதன் 41வது ஆண்டு நிறைவு நாளான ஆகஸ்ட் திங்கள் 1ம் நாள் தொடங்கி, அதிகாரப்பூர்வமாக 1 மணி நேரம் நிகழ்ச்சிகளை ஒலிபரப்ப எண்ணியுள்ளது. இதற்காக பரிசோதனை முறையில் ஜுலைத் திங்களில் நிகழ்ச்சிகள் 1 மணி நேரம் ஒலிபரப்பாகும். அப்போது நாள்தோறும் செய்திகள் 15 நிமிடம், 2 செய்தித் தொகுப்பு தலா 5 நிமிடம் வீதம், 10 நிமிடம், 3 அல்லது 4 சிறப்பு நிகழ்ச்சிகள் 30 நிமிடம் என அமையக் கூடும். நேயர்களின் பங்கெடுப்பு அதிகரிக்கும். ஆகவே தங்களின் உதவி எங்களுக்கு மிகுதியும் தேவைப்படும்.

சீனத் தமிழ் ஒலி இதழ் வெளியிடுவது, நேயர் கடிதங்களைக் கையாள்வதில் தமிழ்ப் பிரிவுத் தலைவர், துணைத் தலைவர் பொறுப்புக்களில் இருப்பவர்களே பங்கு கொள்வது புதுதில்லி முகவரி மூலம் கடிதம் அனுப்புவது தொடர்பாக கம்பம் ஏ இருதயராஜ் கருத்து தெரிவித்துள்ளார்.

கடிதங்களைக் கையாள்வதன் மூலம் தான் நேயர்களின் எண்ணத்தை அறிந்து கொள்ள முடியும். இது தமிழ் ஒலிபரப்பு லட்சியத்தில் ஒரு பகுதியாகும். ஆகவே அனைவருக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும். ஒராண்டுக் காலம் இந்தப் பணியை நிறைவேற்றுவதன் மூலம் படிப்பது, தமிழில் எழுதுவது, நேரடியாகத் தமிழ் மொழியில் சிந்தித்துப் பதிலளிப்பது ஆகிய திறன் பணியாளரிடையை ஏற்படும். அவர்களின் பணித் திறமை அதிகரிப்பதற்கு இது துணைபுரியும். சில நேரத்தில் நேயர்களுக்கு நன்கு பதிலளிக்கப்பதில்லை. உடனடியாகப் பதில் கடிதம் அனுப்ப வில்லை. பதிலளிக்கும் போது குறைவாக எழுதுவது போன்ற குறை தொடர்கின்ற நிலையில் தங்களிடம் மன்னிப்பு கோருகின்றோம்.

இலவச உறையில் அனுப்பிய கடிதம் அடிக்கடி திருப்ம்பி வந்த பிரச்சினை இப்போது நீங்கிவிட்டது. இனி தாராளமாக இலவச உறையை பயன்படுத்துங்கள். புதுதில்லிக்கு கடிதம் அனுப்ப வேண்டாது. மாறாக நேரடியாக எங்களுக்கு கடிதம் அனஉப்ப வேண்டும் என்று மீண்டும் தெரிவிக்கின்றோம்.