தாய்க்கும் பெண் குழந்தைக்குமான உளதாமா தன்மை
cri
ஜுலை 11ம் நாள் உலகின் மக்கள் தொகை நாளாகும். சீன அரசின் மக்கள் தொகை மற்றும் குடும்பத் திட்ட கமிட்டியின் துணைத் தலைவர் பென் குயெயு அம்மையார் பெய்சிங்கில் நடைபெற்ற நினைவு கூட்டத்தில் உரைநிகழ்த்துகையில் மிக பல தாய்மார் பென் குழந்தைகள் ஆகியோரின் நலவாழ்வு வளர்ச்சிக்குத் துணைபுரியும் உளதாம் நன்மை சூழ்நிலையை உருவாக்க சீனா பாடுபட்டு வருகின்றது என்று சுட்டிக்காட்டினார். 9 ஆண்டுகளுக்கு முன் சீனாவில் "இன்ப பணித் திட்டம்" துவங்கியுள்ளது. இதன் மூலம் வறிய தாய்மாருக்கு சிறிய தாழ்ந்த வட்டியுடைய கடன் வழங்கப்பட்டது. அதன் உதவியுடன் ஒரு லட்சம் தாய்மார் வறுமையிலிருந்து விடுப்பட்டனர். மகளிரின் சட்டப்பூர்வமான உரிமையையும் நலனையும் பேணிகாத்து அவர்களின் சமூக மற்றும் பொருளாதார தகுநிலையை உயர்த்துவதில் சீனா மிகவும் கவனம் செலுத்தியுள்ளது. அத்துடன் அவர்களுக்கு தலைசிறந்த நலவாழ்வு சேவையை வழங்கியுள்ளது. தவிர, பள்ளியிலிருந்து விலகிய பெண் குழந்தை மீண்டும் பள்ளிக்கு திரும்ப உதவி வழங்கியுள்ளது என்று அம்மையார் பென் அறிமுகப்படுத்தினார்.
|
|