• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-07-13 10:50:05    
ஹாங்சோ நகரம்

cri

சிஹு ஏரி சுமார் 2000 ஆண்டு வரலாறுடையது. இங்கு, 3 தீவுகளும் 3 அணைக்கட்டுகளும் உண்டு. அவை, சூதி, பெய்தி, யாங்குங்தி என்பனவாகும். சூதி, காதலர் தி என அழைக்கப்படுகின்றது. ஏனெனில், இந்த மூன்று அணைக்கட்டுகளில் ஓர் அணைக்கட்டின் நீளம், 2.8 கிலோமீட்டராகும். அதில், 6 பாலங்கள் அமைந்துள்ளன. இவ்விடத்தில் பல்வகை மலர்கள் மலர்கின்றன. தனிச்சிறப்பு வாய்ந்தவை. ஹாங்சோ நகரின் காதலர் இப்பாலங்களின் மீது நடந்துசெல்ல விரும்புகின்றனர் என்றார் அவர்.

சாங்தென்யியே என்னும் தீவு, சிஹு ஏரியின் தென் முனையில் அமைந்துள்ளது. தெளிந்த நீரில் மிதக்கின்ற மூன்று கற் கோபுரங்கள் சுமார் 400 ஆண்டு வரலாறுடையவை. 2 மீட்டர் உயரமுடைய கோபுரத்தின் உச்சி, சுரைக்காய் வடிவம் போன்றது. கோபுரம், பந்து வடிவமானது. கோபுரத்தில் காணப்படும் 5 சிறிய துவாரங்களில், சிலைகள் அலங்கரிக்கப்பட்டுள்ளன. இரவில், குறிப்பாக, பௌர்ணமியின் போது, கோபுரங்களில் மக்கள், மெழுகு வர்த்தியை ஏற்றி வைக்கின்றனர். அப்போது, கோபுரம், மேகம், சந்திரன் ஆகியவற்றின் நிழல் ஒருங்கே காணப்படுகின்றது. மெழுகு வர்த்தி, ஏரி, நிலா ஆகியவை ஒளிவீசுகின்றன. இதனால் இத்தீவு, சாங்தென்யியே என்னும் பெயர் பெற்றது.

1  2  3