
மனச் சோர்வு என்பது மன அழுத்தம் என்றும் வழங்கப்படுகின்றது. வேதனை இல்லாத மனிதரே இல்லை. ஆனால் சிலரை இது நோய் வடிவத்தில் பீடிக்கின்றது. சரி இந்த நோய்க்கு என்ன அறிகுறி ? பசி எடுக்காமல் போவது ! உறக்கத்தில் மாறுபாடு! உற்சாகமின்மை! நம்பிக்கையின்மை! குற்ற உணர்வு! சிந்திக்க முடியாமை! மரணம் பற்றிய எண்ணம் தலைவலி வயிற்று வலி மனச் சோர்வு வருவதற்கு வயது தடையில்லை. விடலைப் பருவத்தினரிடேயே இது அதிகமாகத் தென்படுகின்றதாம்! காதல் தோல்வி, மண முறிவு இந்த இரண்டினாலும் மனச் சோர்வு ஏற்படலாம்.

பொருளாதார நெருக்கடி, குடும்பத் தலைவிக்குத் தலைவலியாகி மனச் சோர்வை உண்டாக்கக் கூடும். மனச் சோர்வு பல வகைப்படும். இது ஏன் ஏற்படுகின்றது? அறிவியலாளர்க்கே விடை தெரியாத கேள்வி இது! குடும்பத்தில் ஏற்கனவே எவரேனும் இந்த நோய்க்கு ஆளாகியிருந்தால், மற்றவருக்கு இது ஏற்பட 70 விழுக்காடு வாய்ப்புண்டு. இது குணப்படுத்தப்படக் கூடிய ஒரு நோய்தான்? பல வகை சிகிச்சை முறையை மருத்துவர் கையாள்கின்றனர். உலகில் 5 விழுக்காட்டினர் வரை இந்நோய்க்கு ஆளாகியிருக்கின்றனர். நல்ல உணவு, உடற்பயிற்சி நல்ல நண்பர்கள் சீரான குடும்ப உறவு இவை இருந்தால் மனச் சோர்வு நம்மை அண்டாது!
|