
இதய நோய் தலைவிரித்தடுவதற்கு என்ன காரணம்? மக்களின் வாழ்க்கை முறையில் ஏற்பட்ட மாற்றமும் காரணம் என்கிறார் ஹூ தாயி. கொழுப்புச் சத்து, கொலஸ்ட்ரால், கலோரி ஆகியவை அதிகமாக உள்ள உணவுப் பொருட்களை உட்கொள்வது ஒரு காரணம். உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது, அலுவலகத்தில் காணப்படும் அமுக்கம் இந்த இரண்டும் முக்கிய காரணங்களாகின்றன. ஊணச் சதை, நீரிழிவு நோய், இவையும் இதய நோய் அதிகரிப்புக்கு காரணமாகின்றவாம். புகை பிடிப்பது, இதய நோய்க்குக் சாதகமாக அமையலாம். சீனாவில், இயல்பான உடல் எடைக்கு அதிகமாக எடை கொண்டோரின் எண்ணிக்கை 27 கோடியாகும். இத்தகைய பிச்சினைகளைத் தீர்ப்பதில், சீன அரசு முனைப்புடன் ஈடுபட்டுள்ளது. 1 2 3
|