திபெத்தில் முக்கிய திட்டப்பணி
cri
இவ்வாண்டின் ஜூன் திங்கள் இறுதி வரை, சிங்காய்-திபெத் இருப்புப்பாதை, சின்ஹெ மின் நிலையம் முதலிய முக்கிய திட்டப்பணிகளிலான 400 கோடி யுவான் மதிப்புள்ள முதலீடு நிறைவேறியுள்ளது. இத்திட்டப்பணிகள் தடையின்றி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக, திபெத் தன்னாட்சி பிரதேசத்தின் வளர்ச்சி மற்றும சீர்திருத்த கமிட்டியின் தலைவர் லி கோ யோங், 20ஆம் நாள் அறிமுகப்படுத்தினார். இவ்வாண்டின் முற்பாதியில், திபெத்தில், கட்டுமானத்துக்குட்பட்ட முக்கிய திட்டப்பணியின் எண்ணிக்கை 48 ஆகும். அவற்றில், சிங்காய்-திபெத் இருப்புப்பாதையின் திபெத் பகுதியில் தண்டவாளம் போடப்படத் துவங்கியுள்ளது. சின்ஹெ மின் நிலையத்தின் முதலாவது இலக்க மின்னாக்கி ஏப்ரல் திங்களில் இயங்கத் துவங்கியது. இம்முக்கிய திட்டப்பணிகள் கட்டிமுடிக்கப்படுவது என்பது, திபெத் பொருளாதார ஆக்கப்பணிக்குப் பெரிதும் துணை புரியும்.
|
|