|
பிரிட்டனின் ஆக்கிரப்புக்கு எதிரான போராட்டம்
cri
|
 2004ம் ஆண்டு சீனாவின் திபெத்தில் சியான் சு பிரதேசம் பிரிட்டனின் ஆக்கிரமிப்பை எதிர்க்கும் 100வது ஆண்டு நிறைவாகும். அண்மையில் தலைநகரான லாசாவில் "சுசான் ஆத்மா" எனும் வரலாற்று நாடகம் அரங்கேற்றப்பட்டுள்ளது. இதனுடன் நினைவு நடவடிக்கை துவங்கியுள்ளது. திபெத்தின் பல்வேறு இடங்களில் படிப்படியாக மிக பல நினைவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். சுன்சான் சியான் சு பிரதேசத்தில் அமைந்த மலை நகர கோட்டையாகும். 1904ம் ஆண்டில் திபெத்தின் பல்வேறு தேசிய இன மக்கள் பிரிட்டிஷ் ஆக்கிரமிப்பாளரை எதிர்க்கும் போர் களமாக இருந்தது. நினைவு பொருட்கள், இரங்கல் தெரிவிக்கும் விழா உள்ளிட்ட 20க்கும் அதிகமான நடவடிக்கைகள் நினைவு நடவடிக்கைகளில் இடம் பெறுகின்றன. இந்த நடவடிக்கை சப்டெம்பர் திங்கள் வரை நீடிக்கும் என தெரியவருகின்றது.
|
|