• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-07-26 09:51:02    
விளையாட்டுச் செய்திகள்

cri

ஏதென்ஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி பற்றி

ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான சீனப் பிரதிநிதிக் குழு ஜூலை 20ந் நாள் அதிகாரப்பூர்வமாக நிறுவப்பட்டுள்ளது. மொத்தம் 407 விளையாட்டு வீரர்கள் இப்போட்டியில் கலந்துகொள்ளவர். சீனப் பிரதிநிதிக் குழு 26 நிகழ்ச்சிகளின் 203 ஆட்டங்களில் கலந்துகொள்வர். சீன விளையாட்டு வீரர்கள் தமது திறனை சீராக வெளிகொணர்ந்தால், 20க்கும் அதிகமான தங்கப் பதகங்களை சீனா பெறலாம். சிட்னி ஒலிம்பிக் போட்டியில் பெற்ற 28 தங்கப் பதக்கங்களைத் தாண்டும் வாய்ப்பும் உண்டு என்று கருதப்படுகின்றது.

கால்பந்து

ஜூலை 22ந் நாள் நடைபெற்ற ஆசிய கோப்பைக் கால்பந்து போட்டியில் உஸ்பெக்ஸ்தான் அணி 1:0 என்ற கோல் கணக்கில் சௌதி அரேபியாவைத் தோற்கடித்து, 16 அணிகளில் அடுத்த சுற்று போட்டியிக்கு முன்னேறும் முதலாவது அணியாக அது விளங்குகின்றது. உஸ்பெக்ஸ்தான் அணியை பொறுத்தவரையில், இந்த போட்டி அறவே ஒரு பழிவாங்கல் போட்டியாகும். கடந்த முறை ஆசிய கோப்பை போட்டியில் 0:5 என்ற கோல் கணக்கில் சௌதி அரேபியாவிடம் அது தோல்வி கண்டது குறிப்படத்தக்கது.

ஆசிய கோப்பை கால்பந்து போட்டியின் 2வது சுற்று இரண்டாவது போட்டி ஜூலை 21ந் நாள் பெய்சிங்கிலுள்ள திறந்தவெளி விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. 90 நிமிடம் நீடித்த போட்டியில் சீன அணி 5-0 என்ற கோல் கணக்கில் இந்தோனேசியாவை எளிதாக தோற்கடித்தது. இவ்வாறு, சீன அணி ஏ பிரிவில் தற்காலிகமாக முதலிடம் வகிக்கின்றது. அடுத்த போட்டியில் கத்தார் அணியிடம் தோல்வியுறாமல் இருந்தால், சீன அணி சீராக அடுத்த சுற்றுக்கு முன்னேறலாம்.

ஜூலை 23ந் நாள் நடைபெற்ற பீ பிரிவின் 2வது சுற்று ஆட்டத்தில் ஜோர்டான் அணி 2-0 என்ற கோல் கணக்கில் குவெய்தை தோற்கடித்தது. பீ பிரிவின் மற்றொரு ஆட்டத்தில் தென் கொரிய அணி 2-0 என்ற கோல் கணக்கில் அரபு ஐக்கிய எமிரேத்தை தோற்கடித்து, ஜோர்டான அணியுடன் இணைந்து பீ பிரிவில் முதலிடம் வகிக்கின்றது. ஆனால், இரண்டு ஆட்டங்களிலும் தோல்வியுற்ற அரபு ஐக்கிய எமிரேத் அணி, இந்த ஆசிய கோப்பை போட்டியிலிருந்து நாடு திரும்ப வேண்டிய முதலாவது அணியாக விளங்குகின்றது.

41வது அமெரிக்க கண்ட கோப்பை கால்பந்து போட்டியின் அரையிறுதிப் போட்டியின் கடைசி ஆட்டம் லிமாவிலுள்ள தேசிய திறந்தவெளி விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. பிரேசில் 6-4 என்ற கோல் கணக்கில் உருக்குவே அணியைத் தோற்கடித்தது. மற்றொரு அரை இறுதி ஆட்டத்தில் ஆர்ஜென்டின அணி 3-0 என்ற கோல் கணக்கில் கோலம்பியாவைத் தோற்கடித்தது. இவ்வாறு 25ந் நாள் நடைபெறும் இறுதி ஆட்டத்தில் பிரேசிலும் ஆர்டஜென்டினாவும் மோதுகின்றன.

அரை இறுதிப் போட்டியில் நுழைந்த பிரேசில், ஆர்ஜென்டினா, உருக்குவே, கோலாம்பியா ஆகிய நான்கு வலுவான அணிகளும் இந்த கண்டத்தின் மிக உயர்ந்த நிலையை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன.

கைப் பந்து

2004ஆம் ஆண்டுக்கான உலக மகளிர் கைப் பந்து போட்டி ஜூலை 22ந் நாள் சீனாவின் Hefei நகரில் துவங்கியது. சீன அணி ஒரு 3-0 என்ற ஆட்டக் கணக்கில் டாமினிக்கன் அணியைத் தோற்கடித்தது. 23ந் நாள் சீனாவுக்கும் போலாந்துக்குமிடையில் நடைபெற்ற போட்டியில் சீன அணி 3-1 என்ற ஆட்டக் கணக்கில் போலந்து அணியை வென்றது. இவ்வாறு சீன அணி தொடர்ந்து இரண்டு ஆட்டங்களிலும் வெற்றி பெற்று, சாம்பியன் பட்டம் பெறும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.

பூப்பந்து

சர்வதேச பூப்பந்து சம்மேளனம் 22ந் நால் ஏதென்ஸ் ஒலிம்பிக் போட்டியின் பூப்பந்தாட்டத்துக்கான அனைத்து 5 நிகழ்ச்சிகளின் முன்னணி வீரர் வீராங்கணைகளின் பெயர் பட்டியலை உறுதிப்படுத்தியது. சீனாவின் 18 வீரர் வீராங்கணைகளும் அதில் இடம்பெறுகின்றனர். இந்த ஒலிம்பிக் போட்டியில் 32 நாடுகளைச் சேர்ந்த 172 விளையாட்டு வீரர்கள் கலந்துகொள்கின்றனர். அவர்களில் ஆடவர் 89, மகளிர் 83. இந்த எண்ணிக்கை வரலாற்றில் மிகவும் கூடுதலாகும்.

தடக்களப் போட்டி

சீனாவின் லியோநிங் மாநிலத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரரான சி ஹை பெங் என்பவருக்கு இவ்வாண்டு 20 வயதாகிறது. ஆடவருக்கான பத்து நிகழ்ச்சி பன்முக திறமை போட்டியில் இவருக்கு நல்ல எதிர்கால வாய்ப்பு உண்டு. 2001ஆம் ஆண்டில் நடைபெற்ற உலக பல்கலைக்கழக மாணவர் விளையாட்டு போட்டி முதல், இவர் ஏற்கனவே மூன்று போட்டிகளில் 8000க்கு அதிகமான புள்ளிகளை பெற்றார். பத்து நிகழ்ச்சி பன்முக திறமை போட்டியில் இந்த சாதனை ஈட்டிதந்தவர் சீனாவில் இவர் முதல்வர். ஒடுவது, நீளத் தாண்டுதல், உயரத் தாண்டுதல், கண்டிப்பான பயிற்சி முதலிய துறையில் அவருடைய திறமை குறிப்படத்தக்கது. இவர் தோன்றியுள்ளதால், பத்து நிகழ்ச்சி பன்முக திறமைக்கான சர்வதேச போட்டியில் சீனாவின் தகுநிலை பெரிது உயரும் என்று கூறலாம்.