• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-07-28 13:03:47    
நேயர்களின் கருத்துக்கள் 07

cri
மார்ச் திங்களில், சீன தேசிய மக்கள் பேரவையின் 10வது கூட்டத்தொடர் பெய்ஜிங்கில் நடைபெற்றது. இது பற்றி, தொலைபேசி மூலம், பல நேயர்களுடன் தயாரித்த சிறப்பு நிகழ்ச்சிகள் வரவேற்கப்படுகின்றன.

--நேயர்கள் கேள்வி கேட்க, இவற்றுக்கு அறிவிப்பாளர்கள் பதிலளித்துள்ளனர். இந்த நிகழ்ச்சி, நாடாளுமன்றத் தலைவர்கள் நேயர் மன்ற உறுப்பினர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிப்பது போல், அமைந்திருந்தது. நேயர்கள் கேட்ட கேள்விகளும் அளித்த பதிலும் மிக மிகச் சிறப்பாக இருந்தன என்கிறார் ஆரணி பொன்.தங்கவேலன்.

--நேயர்களிடம் கேள்வி கேட்டு பதில் வழங்கும் முறை மிகமிக அருமையிலும் அருமை; நேயர்கள் புரிந்துகொள்ளும் வகையிலும் அறிந்துகொள்ளும் வகையிலும் வழங்கினார்கள் என்கிறார் 30 பள்ளிப்பட்டி, சுப்ரமணியன்.

--இவ்வாண்டில் சற்று அதிகமான தகவல்களையும் விபரங்களையும் அறிந்துகொள்ள முடிகிறது. இக்கூட்டத்தொடர் பற்றி ஏராளமானவற்றை தமிழ்ப்பிரிவின் மூலமும், நேயர்களின் கண்ணோட்டம் மூலமும் அறிந்துணர வாய்ப்பாக உள்ளது என்கிறார் அல்லூர் பெ.ராதாகிருஷ்ணன்.

--இந்த நிகழ்ச்சியில், பெரும்பாலான உறுப்பினர்கள், பொருளாதார அதிகரிப்பு விழுக்காடு உயரும் போது அதன் தரமும் உயர வேண்டும் என்று கூறிய கருத்து மிக அருமை, முக்கியத்துவம் வாயந்தது. சீன தேசிய மக்கள் பேரவை உறுப்பினர்கள் இதை கருத்தில் கொண்டதை பாராட்டுகின்றேன் என்கிறார் நாகர்கோவில் ஒய்ஸ்லின்.

இவ்வாண்டு, நாங்கள் தயாரிக்க துவங்கிய சில புதிய நிகழ்ச்சிகள் பற்றிய நேயர்களின் கருத்துக்கள் இதோ!

--நானும் எனது குடும்பத்தாரும் தவறாமல் நிகழ்ச்சிகளை விருப்பத்துடன் கேட்டு வருகின்றோம். உங்களது நிகழ்ச்சிகள், எங்கள் குடும்பத்தாரைக் கவர்ந்து வருகின்றன. உங்களது நிகழ்ச்சிகள் மேலும் வளர வேண்டும் என வாழ்த்துகிறோம் என்கிறார் இலங்கை, L.F.ஸீமத் ஸியா.

--நட்பு பாலம் நிகழ்ச்சியில், சீன மகளிரின் வாழ்க்கையில் உயர்ந்தவர் என்றோ, தாழ்ந்தவர் என்றோ வேறுபாடுகிடையாது. இது, சீனாவிலுள்ள பெண்களின் மீது, நாங்கள் கொண்டுள்ள அன்பையும் மதிப்பையும் ஆயிரம் மடங்கு உயர்த்தும் என்பதில் ஐயமில்லை என்கிறார் சேலூர், N.சீனிவாசன்

--நட்பு பாலம் நிகழ்ச்சியில், திருமதி கலைச்செல்வி அவர்களின் 5 வருட சீனப் பயணம் குறித்த தகவல்கள், காய்கறி, சமையல், சீனக் கலை நிகழ்ச்சிகள், கூத்து பற்றி அவர் கூறிய தகவல்கள் அருமை என்கிறார் புதுவை, G.ராஜகோபால்.

--நலவாழ்வுப் பாதுகாப்பு நிகழ்ச்சியில், உறக்கத்திற்கும் அழகுக்கும் உள்ள ரகசியத்தை அறிய தந்தீர்கள். தூக்கம் பொதுவாக ஆண் பெண்களுக்கு சமமே;இனிமேல் நானும் நன்கு ஒய்வு எடுத்து உறங்குவேன். நலமுடன் வாழ நல்ல உறக்கம் அவசியம் என அறிந்து கொண்டேன் என்கிறார் ஈரோடு எம்.சி.பூபதி.

அடுத்து, உங்கள் குரல் நிகழ்ச்சி பற்றிய கருத்துக்கள்.

--தொலைபேசி வசதி இல்லாத நேயர்களின் வேண்டுகோளுக்கு ஈடு கொடுக்கும் வகையிலும், எல்லா நேயர்களையும் மகிழ்விக்கும் வகையிலும், தற்போது "சிறப்பு உங்கள் குரல்" வான் உலா வருவதாக எண்ணுகிறோம் என்கிறார் கைத்தறி நகர், J.D.மணிகண்டன்.

--இந்த நிகழ்ச்சியில் பல நேயர்களின் கருத்துக்களைக் கேட்டேன். அவர்கள் ஏதோ கருத்துக்களை வழங்க, அதை நீங்களும் ஒலிபரப்பினீர்கள். இனி, நேயர் மன்றங்கள் சிறப்பான கருத்துக்களைப் பதிவு செய்த நிகழ்ச்சிகளை தெரிந்து எடுத்து வழங்குங்கள் என்கிறார் ராமியம்பட்டி, S.பாரதி.