திபெத்தில் வலம்வரும் மருத்துவ சிகிச்சை வாகனம்
cri
சீன மத்திய அரசு, திபெத்திற்கு வழங்கிய 72 வலம்வரும் மருத்துவ சிகிச்சை வாகனங்கள், திபெத்தின் 72 மாவட்டங்களில் இயங்கும்.
அவை, ஒரு கோடியே 60 லட்சம் யுவான் மதிப்புடையவை.
பல்வகை பொதுவான நோய்களை உறுதிப்படுத்தவும், சிறு அறுவை சிகிச்சை செய்யவும் அவற்றால் முடியும்.
திபெத்தின் ஒதுக்குப்புற வறியப் பிரதேசத்தில் விவசாயிகள் மற்றும் ஆயர்களின் மருத்துவ சிகிச்சை உடல்நல பாதுகாப்புக்கும் உடல்நல மேம்பாட்டுக்கும் இவ்வாகனங்கள் ஆக்கப்பூர்வ பங்காற்றும் என்று, திபெத் நலவாழ்வு துறையின் தலைவர் அ தெங் கூறினார்.
|
|