திபெத்தின் தொலைத்தொடர்பு வளர்ச்சி
cri
திபெத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ஒளி வடத்தையும், அனைத்து வட்டங்களிலும் தொலைபேசியையும் பயன்படுத்தலாம் என்று, திபெத் தன்னாட்சி பிரதேச அரசு ஆக்ஸ்ட் 3ம் நாள் லாசாவில் அறிவித்தது. நவீன தொலைத்தொடர்பு தொழில் நுட்பம் பயன்படுத்தி, உலகின் கூரை என்ற கூறப்படும் திபெத், உலகத்துடன் இரண்டறக்கலக்க முடியும்.கடந்த சில ஆண்டுகளில், ஒளி வடம், செயற்கைக்கோள் தொலைத்தொடர்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகளின் கட்டுமானத்தில், சீன தொலைத்தொடர்பு மற்றும் திபெத்தின் தொடர்புடைய வாரியங்கள், சுமார் 150 கோடி ரென்மின்பி யுவானை முதலீடு செய்துள்ளன. இது வரை, திபெத்தில் தொலைபேசி பயன்படுத்துவோரின் எண்ணிக்கை, 6 லட்சத்தைத் தாண்டியுள்ளது.
|
|