அரசு சாரா மருத்துவ சேவை தொடண்டர் அணி
cri
திபெதின் ஆலி பிரதேசததின் மகளிர் மற்றும் குழந்தைகளுக்குச் சிகிச்சை சேவை புரியும் வகையில் சீனாவில் அரசு சாரா தொண்டர்களால் உருவாக்கப்பட்ட முதலாவது மருத்துவ அணி இன்று பெய்சிங்கை விட்டு அங்குப் புறப்பட்டது. வறுமை ஒழிப்புக்கான சீன நிதியத்தின் முன்மொழிவின் படி இந்த மருத்துவ அணி உருவாக்கப்பட்டது. பெய்சிங்கிலுள்ள அரசு சாரா தொழில் நிறுவனம் மருத்துவ அணிக்கு சிகிச்சை சாதனங்களை வழங்கியுள்ளது. சுய விருப்பத்தின் படி விண்ணப்பம் செய்த பெய்சிங்கின் பல்வேறு மருத்துவ மனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள் இவ்வணியின் உறுப்பினர்களாக விளங்குகின்றனர். திபெத்தில் பச்சிளங்குழந்தையின் இறப்பு விழுக்காடு உயரமாக இருந்ததால் இந்த மருத்துவ உதவியின் மூலம் அங்குள்ள மகளிர் மற்றும் குழந்தைகளுக்கான மருத்துவ நலவாழ்வு சூழ்நிலையை சீர்செய்ய வேண்டும் என்று அமைப்பாளர்கள் விரும்புகின்றனர்.
|
|