2004ம் ஆண்டு முதல் திபெத்தின் "சியெதுங் விழா" அதாவது திபெத் நாடக விழா ஆகஸ்ட் திங்கள் 18ம் நாளன்று நடைபெற வேண்டும். 11ம் நாள் லாசா நகரில் நடைபெற்ற "சியெதுங் விழாவுக்கான" செய்தியாளர் கூட்டத்தில் இது அறிவிக்கப்பட்டது. 1994ம் ஆண்டு முதல் லாசா நகர அரசின் ஏற்பாட்டில் "சியெதுங் விழா" நடைபெற்று வருகின்றது. திபெத் நாள்காட்டின் படி இவ்விழா நடைபெறுகின்றது. உலகில் நடைமுறைக்கு வந்துள்ள நாள்காட்டியுடன் இது இசைவானதல்ல. ஆகவே பல பயணிகள் வணிகர்கள் ஆகியோர் இவ்விழாவில் கலந்து கொள்ளாமல் போயிற்று. 2004ம் ஆண்டு முதல் "சியெதுங் விழா" ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 18ம் நாளில் நடத்த வேண்டும் என்று லாசா நகர் அரசு தீர்மானித்துள்ளது. "சியெதுங் விழா" திபெத்தில் மிக பெரிய விழாக்களில் ஒன்றாகும்.
|