• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-08-12 15:48:05    
நேயர்களின் கருத்துக்கள் 11

cri
நேயர் கடிதம், நேயர் நேரம், உங்கள் குரல், கேள்வியும் பதிலும் ஆகியவை, நேயர்களுடன் இணைந்து தயாரிக்கும் நிகழ்ச்சிகளாகும். அவை பற்றிய கருத்துக்கள் இதோ.

--நேயர் கடிதம் எனும் நிகழ்ச்சி, நேயர்களை ஊக்குவிக்கும் நிகழ்ச்சியாக இருந்து வருகிறது. சீன வானொலியின் நேயர்கள் தொடர்ந்து அதிக கடிதம் எழுதி தமிழ்ப் பணியை உயர்த்துவார்கள் என்பது உறுதி என்கிறார் செந்தலை, N.S.பாலமுரளி.

--கேள்வியும் பதிலும் நிகழ்ச்சியில், நேயர்களின் கேள்விகளுக்குச் சரியான பதிலை அளித்து, சிறப்பித்தது கேட்பதற்கு இனிமையாக இருந்தது. இந்நிகழ்ச்சி, புதிய நேயர்களின் ஐயத்தைக் களைவதாக உள்ளது என்கிறார் S.நாட்டாமங்கலம், V.ராமகிருஷ்ணன்.

நல வாழ்வு பாதுகாப்பு நிகழ்ச்சியில் அறிவிக்கப்பட்ட தகவலை, நேயர்கள் மிகவும் வரவேற்கின்றனர்.

--பூண்டின் மருத்துவப் பயன் பற்றிய கட்டுரையைக் கேட்டேன். நன்றாக இருந்தது. பூண்டு மகத்தான பொருள் தான். மனித குலம், பயன் பொறுவதற்காகத் தோன்றிய அற்புதப் படைப்புக்களில் பூண்டும் ஒன்றாகும் என்கிறார் வளவனுர் புதுப்பாளையம் எஸ்.செல்வம்.

--இந்த நிகழ்ச்சியில், நீண்ட நேரத்தூக்கம் உடம்பிற்கு எந்த வகையில் கேடுவிளைவிக்கிறது என்பதை அறிய முடிந்தது என்கிறார் புதுச்சேரி, P.ஜெயச்சந்திரன்.

--மாவுசேதுங்கின் உடல் ஆரோக்கியம் பற்றிய கட்டுரையில், எவ்வாறு உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று பல கருத்துக்கள் இடம்பெற்றன. தேனீர் அருந்துவது உடலுக்கும், இதயத்துக்கும் நல்லது என்பது கருத்தில் கொள்ளத்தக்கது என்கிறார் செஞ்சி, P.வின்சன்ட்.

--முதியோர் விரும்பும் உடற்பயிற்சிகள் பற்றிக் கேட்டேன். பயனுள்ள குறிப்புகள் ஐயமே இல்லை என்கிறார் ராமியம்பட்டி, எஸ்.பாரதி.

இனி, சீன உணவு அரங்கம் பற்றிய கருத்துக்கள்.

--முட்டை இறைச்சி சூப் என்ற புதுவகையான சூப் பற்றி கூறினீர்கள். இது அவ்வளவாக ருசிப்பதாகத் தெரியவில்லை. இன்னும் சில பொருட்களை சேர்த்தால் மிகவும் வாசமாகவும் ருசியாகவும் இருக்கும் என்று எண்ணுகிறேன் என்கிறார் ராசிபுரம், R.M.மோகன்.

--காளாண் வறுவல் பற்றி தெரிந்து கொண்டேன். நானும் செய்து பார்ப்பேன். சீன உணவு அரங்கம், சிறப்பான நிகழ்ச்சி. அனைவருக்கும் பயன் தரும் என நம்புகின்றேன் என்கிறார் செஞ்சி, K.ராஜாதேசிங்கு.

--பலதரப்பட்ட காளான்களை சமைக்கும் விதம் குறித்து இதுவரை அறிந்தோம். அந்த வரிசையில் இன்னும் ஒருவகை உணவு சமைக்கும் முறை, ஊக்கத் தகவலாக காளான்களின் வகை, அதில் எவை எவை சமைக்க உகந்தவை, போன்றவற்றையும் அறியத்தந்து, சீன உணவு அரங்கத்திற்கு மேலும் பொலிவு ஏற்றப்பட்டது என்கிறார் திருச்சி அண்ணாநகர், V.T.ரவிச்சந்திரன்.

--காளான் வறுவல் சமைப்பது பற்றி அறிந்தேன். வெண்ணிறக் காளான் எங்கள் ஊரில் கிடைக்கிறது. பதுவகையான வறுவலை சமைத்து பார்த்தோம். மிக எளியது. சுவை மிகுதி பாராட்டுக்கள் என்கிறார் விழுந்தமாவடி, M.R.நாகேந்திரன்.