இனி, சீன மகளிர் நிகழ்ச்சி பற்றிய கருத்துக்கள்:
--பீகிங் இசை நாடகச் கலைஞரான பெண்மணியைப் பற்றி, கூறக்கேட்டேன். பல நாடுகளுக்குச் சென்று, பீகிங் இசை நாடகத்தை அவர் அரங்கேற்றியிருப்பது பாராட்டுக்குரியது என்கிறார், முனுகப்பட்டு P.கண்ணன்சேகர்.
--புல்வெளியிலிருந்து வரும் உள்மங்கோலிய இனப்பாடகியை அறிந்து கொண்டோம். செல்வாக்கும் மக்கள் விரும்பும் பாடகியுமான இவர் மக்களின் மனங்களில் நிறைந்திருப்பவர் என்பதில் வியப்பில்லை என்கிறார் ராமியம்பட்டி, எஸ்.பாரதி.
அடுத்து, பிற நிகழ்ச்சிகள் குறித்த நேயர்களின் கருத்து.
--தமிழ் மூலம் சீனம் நிகழ்ச்சியில் இடம்பெற்ற பாடங்கள் மிகவும் தெளிவாகவும் புரியும்படியும் இருந்தன. எனக்குள் சீன மொழியை பேச, கற்றுக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை, என்னுடைய மனதில் துளிர் விடத் துவங்கியுள்ளது. நிகழ்ச்சியை குறிப்பு எடுப்பது மட்டுமின்றி, ஒலிப்பதிவும் செய்து வருகின்றேன் என்கிறார் பாண்டமங்கலம் எம்.தியாகராஜன்.
--காட்டிக்கொடுத்த தலை எனும் கதை மிகவும் விறுவிறுப்பாக இருக்கிறது. இதை, தொடர் கதையாக வழங்குவது மிகவும் சிறப்பு. எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது என்கிறார் மீனாட்சி பாளையம், கே.அருண்.
--சீன சமூக வாழ்வு நிகழ்ச்சியில், பாண்டா பாதுகாப்புத் தளம் பற்றியும் பாண்டா உலகின் அரிய வகை விலங்கு என்பதையும் அறிந்தேன். உலகின் அபூர்வ வகை விலங்கான பாண்டாக்களின் பாதுகாப்புக்கு பாடுபடும் சீன அரசை பாராட்டுக்கள் என்கிறார் S.K.பாப்பம் பாளையம், P.T.சுரேஷ்குமார்.
--சிறப்புக் குடும்பம் வாயிலாக வெளிநாட்டவர் வருகை சீனாவில் அதிகரிப்பதை சிறப்பாக, சீன சமூக வாழ்வு நிகழ்ச்சி எடுத்துக் காட்டுவதாக, அமைகிறது என்கிறார் மண்டபம், A.R.மூர்த்தி
--கடந்த ஆண்டின் கடித எண்ணிக்கையில் தமிழ் பிரிவு 2ம் இடம் பெற்றதை அறிந்தோம். மகிழ்ந்தோம். இவ்வாண்டில், முதலிடம் பெற இணைந்து பாடுபடுவோம் என்கிறார் ஈரோடு, M.C.பூபதி.
--இவ்வாண்டில், ஒரு சிறந்த நேயர் என்ற பெருமையை பெற நான் முயற்சி செய்ய வேண்டும் என்கிறார் பாலக்காடு, T.V.ராமசுவாமி.
இனி, சீன உணவு அரங்கம் நிகழ்ச்சி பற்றிய கருத்துக்கள்.
--காளாணைப் பயன்படுத்தித் தயார் செய்யும் மற்றொரு உணவு வகையை அறிமுகம் செய்த கடிகாசலம், வாணி ஆகியோருக்கு நன்றி. எளிமையான செய்முறைதான். எனவே, அசைவு உணவை விரும்பும் நேயர்கள் அனைவரும் இவ்வுணவை எளிதில் தயார் செய்து உண்ணலாம் என்கிறார் வளவனுர் புதுப்பாளையம் எஸ்.செல்வம்.
--உருளை காளான் வறுவல் குறித்த உணவுவகை சமைப்பது பற்றி கேட்டேன். இங்கு உருளைகிழங்கு மற்றும் காளான்கள் எளிதாக கிடைக்கும். சீன உணவு வகைகள் உடல் வலுவைத் தருகிறது. தவிர, சுவையாகவும் இருக்கின்றன என்கிறார் ஈரோடு, M.C.பூபதி.
--கடிகாசலம் மற்றும் வாணி, சமையல் முறை பற்றிக் கூறிய விதம் அருமை. கத்திரிக்காய் வறுவல் சீன முறைப் படி செய்வது. பிரமாதம் எங்கள் ஊரில் பிரியாணி பரிமாறும் போது, இதைச் சேர்த்துப் பரிமாறுவது வழக்கம் என்கிறார் மறைமலைநகர், C.மல்லிகாதேவி.
|