
திபெத்தின் லாசாவில் புத்த நடவடிக்கையில் ஈடுபட்ட 11வது பான்சான் எர்தனி சுசிச்சேபுவைத் திபெத் தன்னாட்சி பிரதேசத்தின் பொறுப்பாளர் 14ந் நாள் பார்த்தார். சந்திப்பின் போது, 11வது பான்சான் திபெத்தின் வளர்ச்சிக்கு மன நிறைவு தெரிவித்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளில், திபெத் பொருளாதாரம் வளர்ந்து வருகின்றது. மக்களின் வாழ்வு நிலைமை இடைவிடாமல் உயர்ந்து வருகின்றது. திபெத் மரபு புத்த மதத்தின் பல்வேறு கோயில்களும், மத நடவடிக்கை நிலையங்களும் நன்றாகப் பாதுகாக்கப்பட்டுள்ளன. பரந்த அளவிலான புத்த மத குருமார்களின் மத நம்பிக்கை
சுதந்திரத்துக்கு முழுமையாக மதிப்பு அளிக்கப்பட்டுள்ளது. இவை எல்லாம் எனக்கு மகிழ்ச்சி தருவதாக 11வது பான் சான் தெரிவித்தார்.
|