சிங்காய் திபெத் இருப்புப் பாதையின் கட்டுமானத்தின் பல்வேறு திட்டப் பணிகளும் சுமுகமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இது வரை இத்திட்டப்பணிகளில் முதலீடு செய்துள்ள தொகை 1647 கோடி யுவானை எட்டியுள்ளது.
சீன இருப்புப் பாதை அமைச்சகத்திலிருந்து வந்த புதிய தகவலுக்கிணங்க, இவ்வாண்டின் ஆக்ஸ்ட் திங்கள் 5ந் நாள் வரை, சிங்காய் திபெத் இருப்புப் பாதையின் கல்மு முதல் லாசா வரையான 525 கிலோமீட்டர் நீளமான பகுதி நிறைவேற்றப்பட்டுள்ளது. இது மொத்த திட்டப்பணியின் 45.9 விழுக்காடாகும். மதிப்பீட்டின் படி, 2007ஆம் ஆண்டு ஜுலை திங்கள் முதல் நாள் வரை இந்த இருப்புப் பாதை போக்குவரத்துக்கு வரவுள்ளது.
|