சீனப் பண்பாடு நிகழ்ச்சியில், சீனாவின் பாரம்பரிய பண்பாடு பற்றிய தகவல் இடம்பெற்றது. பல நேயர்களுக்கு இந்த நிகழ்ச்சியை, பாராட்டுகின்றனர். முதலில், அவர்களின் கருத்துக்களைக் கேட்டு மகிழுங்கள்.
--தீபத்திருவிழா என்பது தமிழகத்தின் கார்த்திகை தீபத்துடன் ஒப்பிடும் வகையில் இருக்கிறது. இத்திருவிழாவிற்கு நீண்ட வரலாறும் பண்பாடும் உண்டென்பதை இந்நிகழ்ச்சி மூலம் உணா முடிந்தது என்கிறார் மண்டபம் A.R.மூர்த்தி.
--கலையாக மாறிய ஒட்டுத்துணி என்றும் தலைப்பில், கடிகாசலம் வழங்கிய கட்டுரை மூலம், சீனாவின் வடபகுதியிலுள்ள மக்களின் பண்பாடு பற்றி, அறிய முடிந்தது. இந்த துறையில் கடந்த ஆண்டுகளிலான வளர்ச்சியை இந்நிகழ்ச்சியின் மூலம் கேட்டு அறிந்தேன். நிகழ்ச்சி மிக அற்புதம் என்கிறார் விழுப்புரம் பி.அஸ்வின்.
--நாசி இன மக்களின் பண்பாட்டை உணர முடிந்தது. அவர்களின் வாழ்க்கை முறையும் தெரிய வருகிறது. முக்கியமாக சீனாவில் வாழும் நாசி இன மக்கள் கொண்டாடும் பாரம்பரிய விழாக்களை அறிந்து பொழுது நேரில் அவர்களைக் கண்டது போன்ற உணர்வு ஏற்பட்டது என்கிறார் செந்தலை N.S.பாலமுரளி.
--ஹன் இனத்தவரின் புத்தாண்டு வசந்த விழா பற்றி கேட்டேன். விளக்குவிழா, வெள்ளை மலர் விழா என்று திபெத்தினத்தவர் கொண்டாடுகின்றனர். தமிழகத்தில் கோயில்களில் வெண்ணெய், தயிர், சந்தனம், பால் அபிசேகம் செய்வது போல் நடைபெறுகிறது என்று கூறியது இந்த நிகழ்ச்சிக்குப் பெருமை சேர்ப்பதாக அமைந்து இருந்தது. நல்ல பண்பாட்டுச் செய்தி ஒன்றை அறிந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி என்கிறார், விழுப்புரம் எஸ்.பாண்டியராஜன்.
--சீனப் பண்பாடு நிகழ்ச்சியில், ஒவ்வொரு இனத்தவரின் வாழ்க்கை, திருமணம், திருவிழா ஆகியவை பற்றி, விரிவாகவும் தெளிவாகவும் வழங்கப்பட்டது. இந்த வரிசையில், நாசி இன மக்களின் விழாக்களை அறிமுகம் செய்து நிகழ்ச்சியை மேலும் சிறப்பு செய்துள்ளீர்கள் என்கிறார், திருச்சி அண்ணாநகர், V.T.ரவிச்சந்திரன்.
--திபெத் இனப் பண்பாடு பற்றி அறிந்தேன். புத்தர் உருவச்சிலைகள் வெண்ணெயால் தான்செய்வர்கள் என்ற தகவல் ஆர்ச்சரியம் அளித்தது. கிபி 7ம் நூற்றாண்டில் இருந்து இது போன்ற வெண்ணெய் உருவச்சிலைகள் செய்யப்படுகிறது என்றும், புத்தாண்டு நாளில் பெரிய உருவச்சிலைகள் செய்ய எவ்வளவு கிலோவெண்ணெய் தேவை என்றும் அறிந்தேன் என்கிறார் மதுரை J.D.அண்ணந்தன்.
அடுத்து, பிற நிகழ்ச்சிகள் பற்றி, நேயர்களின் கருத்து.
--மக்கள் சீனம் நிகழ்ச்சியில், வெளிநாடுகளில் கல்வி பயின்ற சீன மாணவர்கள் தாய்நாட்டில் தொழில் நடத்துவது பற்றி கேட்டேன். திறமைசாலிகளைக் கவர்ந்திழுப்பது என்ற சீன மக்கள் தேசியப் பேரவையின் முடிவுகளும் தீர்மானங்களும் நடைமுறைப்படுத்தப்படுவது கேட்டு மகிழச்சி அடைகிறேன் என்கிறார் மதுரை, C.திருநாவுக்கரசு.
--மலர்ச்சோலையில், இந்தியர் ஒருவர் சூரிய ஒளியைப் பயன்படுத்தி, கிட்டத்தட்ட எட்டுவருடங்கள் வாழ்ந்து வருவது அறிந்து வியந்தோம். இதைப் போல், தமிழகம் கோபிசெட்டி பாளையத்தைச் சார்ந்த இனியன் என்பவர் கடந்த இரண்டு வருடமாக வெறும் தண்ணீரை மட்டுமே அருந்தி உயிர் வாழ்ந்து வருகிறார் என்கிறார் மீனாட்சிபாளையம், கே.அருண்.
--தமிழ் மூலம் சீனம் நிகழ்ச்சி அருமையாக உள்ளது. நான் மிகவும் ரசித்துக் கேட்டேன் என்கிறார், கண்டமங்கலம், A.முஜீபுர்ரஹ்மான்.
--உங்கள் குரல் நிகழ்ச்சியில், திருச்சி நேயர்களின் கருத்துக்களை மிகவும் தெளிவாகவும் இனிய குரல் வளத்தால் வழங்கி எங்களை மகிழ்ச்சியில் ஆழத்தி விட்டீர்கள் என்கிறார் டி.எம்.முருகானந்தம்.
--கேள்வியும் பதிலும் நிகழ்ச்சியில், தமிழக பயண அனுபவங்களைப் பற்றி கூறினீர்கள். விழுப்புரம், பேளுக்குறிச்சி, சேந்தமங்கலம் பெருந்துறையில் பல நிகழ்ச்சிகளில் பங்கு பெற்றதைக் கூறினீர்கள். இந்நிகழ்ச்சியை கேட்ட போது, உங்களுடன் நேரில் பயணம் செய்தது போல் உணர்ந்தேன் என்கிறார் ராசிபும் R.M.மோகன்.
|