• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-08-20 15:46:25    
புகைபிடிப்பதை தடுப்பது

cri

புகைபிடிப்போர் புதிதாக உருவாவதைத் தடுக்கும் அதேவேளையில் புகைபிடிப்பதை ஒழிப்பதற்காகச் சீனா பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. புகை பிடிப்பதை ஒழிக்கும் ஆய்வகம் ஆலோசனை வழங்கும் மையம் ஆகியவற்றைச் சிறப்பாக அது நிறுவியுள்ளது. புகைபிடிப்போரின் உணர்வையும் செயலையும் ஆராய்ந்து இதற்கென சிறப்புக் கொள்கையை அறிவித்துள்ளது. பல்வேறு இடங்களிலுள்ள மருத்துவ மனைகள் புகைபிடிப்பதற்கு எதிரான துறையை நிறுவி புகைபிடிப்போருக்கு உதவிட அரசு ஊக்கமளிக்கின்றது. பெய்சிங்கில் 15 மருத்துவ மனைகள் இத்தகையை அலுவலைத் துவக்கி நோயாளிகளின் உணர்வைச் சரிப்படுத்தி அவர்களின் மனவுறுதியையும் நம்பிக்கையையும் அணிதிரட்ட உதவி வருகின்றன.
இந்தப் பணியை வலுப்படுத்தும் வகையில் சர்வதேச "புகையிலை கட்டுப்பாடு பற்றிய கட்டுக்கோப்பு பொகு இணக்க உடன்படிக்கையில்" 2003ம் ஆண்டில் சீனா கையொப்பமிட்டுள்ளது.
உடன்படிக்கையை நிறைவேற்றுவதற்காக, புகையிலை கட்டுப்பாட்டுத் திட்டத்தை வகுத்து இதில் ஈடுபடுவதற்கான சிறப்பு அணியை நிறுவுமாறு, சீன நலவாழ்வு அமைச்சகம் கோரிக்கை விடுத்துள்ளது.. 2005ம் ஆண்டில் மாநிலம் முதல் மாவட்டம் வரை புகை பிடிப்பதைக் கட்டுப்படுத்தும் வலைப் பின்னலை படிப்படியாக நிறுவி, வலுப்படுத்த வேண்டும். வேவ்வேறு துறை நிபுணர் இடம் பெறும் பணிக் குழுவை உருவாக்க வேண்டும். புகைப்பத்தைக் கட்டுப்படுத்துவது பற்றிய அறிவு, தொழில் நுட்ப பயிற்சி ஆகியவை வழங்கப்பட வேண்டும்.

இத்துறையில் சீனா மேற்கொண்ட முயற்சியை சீனாவுக்கான உலக நலவாழ்வு அமைப்பின் பிரதிநிதி பேக்கடெம் பாராட்டுகின்றார். சர்வதேச புகையிலை கட்டுப்பாடு பற்றிய கட்டுக்கோப்பு உடன்படிக்கையின் சில நடவடிக்கைகள் சீனாவில் நடைமுறைக்கு வந்துள்ளன. ஏனையவையும், நிறைவேற்றப்படுவது திண்ணம் என்றார் அவர்.