நல வாழ்வு பாதுகாப்பு நிகழ்ச்சியில் அறிவிக்கப்பட்ட தகவலை, நேயர்கள் மிகவும் வரவேற்கின்றனர்.
--இந்த நிகழ்ச்சி மூலம், நீண்ட நேரத் தூக்கம் உடம்பிற்கு எந்த வகையில் கேடுவிளைவிக்கிறது என்பதை அறிய முடிந்தது என்கிறார் புதுச்சேரி, P.ஜெயச்சந்திரன்.
--பூண்டின் மருத்துவப் பயன் பற்றிய கட்டுரையைக் கேட்டேன். நன்றாக இருந்தது. பூண்டு மகத்தான பொருள் தான். மனித குலம், பயன் பொறுவதற்காகத் தோன்றிய அற்புதப் படைப்புக்களில் பூண்டும் ஒன்றாகும் என்கிறார் வளவனுர் புதுப்பாளையம் எஸ்.செல்வம்.
--முதியவர்களுக்கான எளிய மருத்துவ முறைகள், உடற்பயிற்சிகள் என, பல்வேறு தகவல்களும் மிகவும் பயனுள்ளவை. தொடரட்டும் என்கிறார் மோப்பிரிபாளையம், B.தங்கராஜ்.
--மாசேதுங்கின் உடல் ஆரோக்கியம் பற்றிய கட்டுரையில், உடலை எவ்வாறு ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது என்று பல கருத்துக்கள் இடம்பெற்றன. தேனீர் அருந்துவது உடலுக்கும், இதயத்துக்கும் நல்லது என்பது கருத்தில் கொள்ளத்தக்கது என்கிறார் செஞ்சி, P.வின்சன்ட்.
--முதியோர் விரும்பும் உடற்பயிற்சி பற்றிக் கேட்டேன். பயனுள்ள குறிப்புகள்!ஐயமே இல்லை என்கிறார் ராமியம்பட்டி, எஸ்.பாரதி.
சீனத் தேசிய இனக் குடும்பம் நிகழ்ச்சியில், சீனாவின் சிறுபான்மைத் தேசிய இனங்களை அறிமுகப்படுத்துகின்றோம்.
--பூயின் கிராமம் பற்றி கூறப்பட்டது. கிராமத்து மக்களின் வாழ்க்கைத்தரம், உடை இடம் அவர்களின் கலாச்சாரம் பற்றி கூறியது நன்றாக இருந்தது. முக்கியமாக, 70 வயது மூதாட்டி, பாடல்களைப் பாடியது மிகவும் நன்றாக இருந்தது என்கிறார் ராசிபுரம், R.M.மோகன்.
--பூயி இனக்கிராமம் பற்றிய விரிவான கருத்தாய்வு மிகவும் அருமை. அந்த மக்கள் மகிழ்ச்சியாக கிராமியப் பாட்டு பாடியது. குறித்தும், 3 பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ள அந்தக் கிராமம் பற்றியும் விரிவாக கூறியது மிகவும் அருமை என்கிறார் பாண்டமங்கலம், P.R.கார்த்திகேயன்.
இனி, சீன உணவு அரங்கம் பற்றி, நேயர்களின் கருத்துக்களைக் கேளுங்கள்.
--இதில், காளான் இறால் வறுவல் தயாரிப்பது பற்றி கேட்டேன். செய்முறை எளிமையாதத்தான் இருக்கிறது. இப்படிப்பட்ட எளிமையான செய்முறை கொண்ட உணவுகள் பற்றி ஒலிபரப்புவதை வரவேற்கின்றோம் என்கிறார் பாலக்காடு, T.V.ராமசுவாமி.
--முட்டை, இறைச்சி சூப் செய்து பார்த்தோம். மிகவும் நன்றாக இருந்தது. மேலும் இந்த நிகழ்ச்சியில் சிறு சமையல் குறிப்புகள் கூறுமாறு வேண்டுகிறேன் என்கிறார் விழுப்புரம், P.அஸ்வின்.
எப்பொழுதும் போல், பல நேயர்களுக்கு, உங்கள் குரல் நிகழ்ச்சியைப் பிடிக்கிறது.
--இந்நிகழ்ச்சியில் P.A.நாச்சிமுத்து அவர்களின் எதிர்காலத் திட்டங்களையும் முன் மொழிவுகளையும் அறிந்து மகிழ்ந்தோம் என்கிறார் மீனாட்சிபாளையம் கே.அருண்.
--சேந்தமங்கலம் S.M.ரவிச்சந்திரன் அருமையான தகவல்களை வழங்கி, தான் ஒரு மூத்த நேயர் என்பதை நிருபித்துவிட்டார் நிகழ்ச்சி மிக அருமையாக இருந்தது என்கிறார், 30 பள்ளிப்பட்டி N.செந்தில்குமார்.
|