திபெத்தில் கலந்துரையாடல் கூட்டம்
cri
காலஞ்சென்ற சீனத் தலைவர் தெங் சியௌபிங்கின் 100வது பிறந்த நாளை முன்னிட்டு, திபெத் தன்னாட்சிப் பிரதேச அரசு 21ந் நாள் முற்பகல் லாசாவில் கலந்துரையாடல் கூட்டம் நடத்தியது. திபெத் பணிக்கு தெங் சியௌபிங் நீண்ட காலமாக முக்கியத்துவம் அளித்து, அதன் நிதானத்திலும் வளர்ச்சியிலும் கவனம் செலுத்திவந்தார் என்று இப்பிரதேசத்தின் அரசாங்க அதிகாரி கூறினார். நாட்டின் அரசுரிமை, பிரதேச ஒருமைப்பாடு ஆகியவற்றைப் பேணிக்காக்கவும், திபெத்திலான அடிமைகளின் விடுதலைக்கும், சோஷலிச நவீன மயமாக்க நிர்மாணத்திற்கும் அவர் மாபெரும் பங்காற்றினார். திபெத் வளர்ச்சிக்கு தெங் சியௌபிங் ஆற்றிய பங்கு, திபெத் மக்களின் மனதில் பசுமரத்து ஆணி போல் பதிந்துள்ளது என்றார் அவர்.
|
|