திபெத்தில் நெடுஞ்சாலைக் கட்டுமானம்
cri
திபெத் போக்குவரத்து துறையின் வளர்ச்சியில் சீன அரசு கவனம் செலுத்திவருகின்றது. தற்போது, திபெத் நெடுஞ்சாலையின் கட்டுமானம் வரலாற்றில் மிக உயர்ந்த காலகட்டத்தில் அடியெடுத்துவைத்துள்ளது. திபெத் தன்னாட்சிப் பிரதேச போக்குவரத்து பகுதியின் தலைவர் காசூ, இதைத் தெரிவித்தார். இதற்கான முதலீட்டை அரசு இடைவிடாமல் அதிகரித்துவருகின்றது. கடந்த 3 ஆண்டுகளில் மட்டும், 720 கோடி யுவான் முதலீடு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு நிதியின் ஆதரவினால், திபெத் தன்னாட்சிப் பிரதேச போக்குவரத்து நிலைமை சீரடைந்துவருகின்றது. தற்போது, உலகின் கூரை என்று அழைக்கப்படும் திபெத் பிரதேசத்தில் போக்குவரத்துக்குத் திறந்துவைக்கப்பட்ட நெடுஞ்சாலையின் நீளம், 41 ஆயிரம் கிலோமீட்டர் ஆகும். கிராமங்களில் அது, 22 ஆயிரம் கிலோமீட்டரை எட்டியுள்ளது.
|
|