• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-08-24 13:42:53    
நேயர்களின் கருத்துக்கள் 15

cri
அடுத்து, பிற நிகழ்ச்சிகள் பற்றிய கருத்துக்கள்.

--செய்திகள், விளையாட்டுச் செய்திகள், தமிழ் மூலம் சீனம், சீனக் கதை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் அனைத்தும் அருமையாக உள்ளன. சீனக் கதையை கேட்க கேட்க ஆவலாக இருக்கிறது என்கிறார் இலவுவிளை N.ஏசுராஜ்.

--சீனாவில் இன்பப்பயணம் நிகழ்ச்சியில், சுவையான சீன உணவை சமைக்கவும், சீன மக்கள் வாழ்க்கை பற்றி அறியவும், சீன ஆட்சியாளர்கள் கொண்டு வந்த நடைமுறை தற்சமயம் வெற்றி பெற்றுவிட்டது எனலாம். இந்த சுற்றுலா பயணிகளால் உலக மக்கள் சீனாவையும், சீன மக்களையும் நன்கு அறிய முடிந்தது எனலாம் என்கிறார் நாகர்கோவில், ஸடெல்லா ஷர்மிளா.

--உங்கள் நிகழ்ச்சிகள் அனைத்தும் அருமை. தவறாது கேட்டு வருவது மட்டுமல்ல, அநேக நேயர்களுக்கும் அறிமுகம் செய்து வருகிறேன் என்கிறார் இலங்கை கினிகத்தேனை, P.மூர்த்தி.

--சீனாவில் துருபான் என்னும் நிலப்பகுதியில், பாலைவனம், ஏரி, இயற்கை காட்சிகள் உண்டு. இங்கு, பல வகையான தேசிய இன மக்கள் வாழ்கின்றன. சுற்றுலா பயணிகளும் இங்கு வருகின்றனர். உலக மக்களைக் கவரும் வகையில் இந்த நிலப்பகுதி அமைந்திருக்கிறது எனக் கூறலாம் என்கிறார் சேந்தமங்கலம், S.M.ரவிச்சந்திரன்.

--நேயர் நேரம் நிகழ்ச்சிக்கு நேரம் குறைவாக உள்ளது. அதிக மடல்கள் நிகழ்ச்சியில் இடம்பெற வாய்ப்பு இல்லாமல் போய் விடுகிறது. எனவே நிகழ்ச்சி மாற்றத்தை, மறு பரிசீலனை செய்ய வேண்டுகிறேன். ஞாயிற்றுகிழமையில் இந்நிகழ்ச்சி வலம் வருவதை பல நேயர்களும் விரும்புகிறார்கள் என்கிறார் பரசலூர், S.உத்தமசீலன்.

--ஏப்ரல் 28ம் நாள் வழங்கிய நேயர் நேரம் நிகழ்ச்சியில், 13 நேயர்களின் கடிதங்கள் மட்டுமே இடம்பெற்றது. இந்நிகழ்ச்சியில் நேரம் அதிகரிக்கப்பட வேண்டும். இதனால், கடிதவரவு மேலும்உயரும். ஆவன செய்ய வேண்டுகிறேன் என்கிறார் திருச்சி அண்ணாநகர், V.T.ரவிச்சந்திரன்.

--ஒலி எனும் சிறப்பு இதழ், மிகவும் நன்றாக உள்ளது. இதில் இடம்பெற்ற நிழற்படங்கள் அருமை. இனி, ஒவ்வொரு திங்களும், இதழ் வெளியிட, தமிழ்ப்பிரிவு முயற்சி மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன் என்கிறார் 30 பள்ளிப்பட்டி, P.R.சுப்ரமணியன்.

--ஒலி இதழில், இடம்பெற்ற வண்ணப்படம், செய்திகள் முதலியவை, மிகவும் பயனுள்ளவை, சென்னை, ஆரணி, புதுவை உள்ளிட்ட செய்திகளை வாசிக்கும் போதும், நிழற்படத்தையும் பார்க்கும் போதும், நேரில் கலந்து கொண்டது போன்ற உணர்வு ஏற்பட்டது என்கிறார் தாதம்பேட்டை, எஸ்.கனகசபை.