• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-08-27 09:03:16    
நேயர்களின் கருத்துக்கள் 16

cri
சீனாவில் இன்ப பயணம், எப்பொழுதும் பல நேயர்களை ஈர்த்துள்ளது. அவர்களின் கருத்து இதோ.

--இந்த நிகழ்ச்சி ஒரு அவசியாகும். இன்றியமையாத ஒரு இன்ப பயணம் ஆகும். இது, நமது நேயர்களுக்கு ஒரு அறுசுவை உணவு போல் உள்ளன. எப்போது சீனாவில் இன்ப பயணம் கிடைக்கும் என்ற எண்ணகள் உள்ளன. அது போல், சீனாவில் இன்ப பயணம் காணப்படுகிறது என்கிறார், குருவம்பட்டி, T.குமார்.

--இந்நிகழ்ச்சியில், ஹார்பின் நகரம் என்ற கட்டுரையைக் கேட்டேன். 4 பருவ காலங்களிலும் ஹார்பின் நகரம் மிக அழகானது என்பதை நான் அறிந்தேன். இந்நகரின் பனிக்கட்டி சிறபங்கள் உலக புகழ் மிக்கவை அல்லவா?ஆனால், பல வகைகளிலும் இந்நகரம் புகழ் மிக்கது என்பதை கட்டுரை வாயிலாக அறிந்து கொண்டேன். ஈர்ப்பு சக்தி மிக்க ஹார்பின் பற்றிய பல்வேறு தகவல்களை அளித்தமைக்கு என் நன்றியைத்தெரிவித்துக்கொள்கிறேன் என்று, வளவனூர் புதுப்பாளையம் எஸ்.செல்வம்.

இனிமையான இசை நிகழ்ச்சி பற்றிய கருத்துக்கள்.

--ஏப்ரல் திங்கள், சீனாவில் வசந்த காலமாகும். அப்போது, அதற்கு பொருத்தமான பாடலை ஒலிபரப்பியது மிகவும் பொருத்தமாகவும் இனிமையாகவும் இருந்தது. சிறப்பு நாள்களை முன்னிட்டு, அதற்கு மிக பொருத்தமான பாடல்களை வழங்கி, அதற்கு அந்த பாடலின் கருத்துக்களை தமிழில் வழங்கியது மிகவும் நன்றாக இருத்தது என்கிறார் 30 பள்ளிப்பட்டி, சுப்ரமணியன்.

--ஒரு குறைபாடு உண்டு அதாவது ஒரு தமிழ்ப்பாட்டு கிட்டத்தட்ட 3 வாரமாக ஒலிபரப்புகிறீர்கள். அதாவது இந்த பாட்டு பாண்டி பஜார்ரே பாண்டி பஜார்ரே என்ற பாடல் இனிமேல் வாரம் ஒரு பாட்டு மாற்றி ஒலிபரப்பினால் சிறப்பாக இருக்கும் என்கிறார் கண்டமங்கலம், A.முஜீபுர் ரஹ்மான்.

--காதலர் தினம் குறித்த பாடல்கள் நேயர்களை மிகவும் ரசிக்கச் செய்திருக்கும். மகிழ்ச்சி தரும் தாதல் எனும் பாடல் கேட்ட உடன் எங்களுக்கு காதல் உணர்வு ஏற்படும் என்று கூறினீர்கள் என்கிறார் திருச்சி அண்ணாநகர், R.மகேந்திரன்.

எமது இணையத்தளம் திறந்து வைக்கப்பட்ட பின், நேயர்கள் அதை மிகவும் வரவேறுகின்றார்கள்.

--இணையத்தளத்தின் மூலம், தமிழ்ப்பிரிவு வழங்கும் நிகழ்ச்சிகளைப் பார்த்து வருகிறேன். நிகழ்ச்சிகளை வானொலியில் கேட்பதை விட, இணையத்தளத்தின் மூலம் பார்க்கும் போது, சீனப் பெயர்களை தெளிவாகவும், மற்றும் புலகப்படத்துடன் பார்க்க முடிகிறது. அதனால், நேரம் கிடைக்கும் போது மீண்டும் பார்க்க முடிகிறது என்கிறார் கல்குறிச்சி, C.அஸ்வின்.

--இணையத்தளத்தின் மூலம், சின்குவா செய்தி நிறுவனத்தின் கருத்து என்ற தலைப்பில் வெளியிட்டப்பட்ட தைவான் சுதந்திரம் பற்றிய கட்டுரையை படித்தேன். எதற்கும் ஒர் எல்லை உண்டு, அதை மீறக் கூடாது என்பதனை இந்த கட்டுரை மூலம் அறியமுடிந்தது என்கிறார் பேளுக்குறிச்சி, K.செந்தில்.

--CRI ONLINE எனும் இணையத்தில், தற்போது நிகழ்ச்சிகளை கேட்டு ரசிக்கலாம் எனும் செய்தி, எங்களை போன்ற INTERNET பிரியர்களுக்கு ஒரு நல்ல செய்தி என்பதில் ஐயம் இல்லை. நாங்கள் மிகவும் ரசிக்கும் நிகழ்ச்சிகளை பற்றிய விவரங்களை அப்படியே DOWN LOAD செய்து PRINT OUT எடுத்து கொள்ள கொள்ள, அது வசதியாக இருக்குமல்லவா?என்கிறார் செல்லூர், N.சீனவாசன்.