சீனத் திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தில், மக்களின் வாழ்க்கை நிலைமை மேம்பட்டுள்ளது. 2003ஆம் ஆண்டில், திபெத் விவசாயிகள், ஆயர்கள் ஆகியோரின் நபர்வாரி வருமானம் சுமார் ஆயிரத்து 700 யுவானாகும்.
2001ஆம் ஆண்டில், திபெத்திற்கு உதவிட, முக்கிய திட்டப்பணிகளை நடுவண் அரசு உறுதிப்படுத்தியது. வேளாண்மை, நீர் சேமிப்பு, எரியாற்றல் உள்ளிட்ட துறைகளுடன் தொடர்புடைய இத்திட்டப்பணிகளுக்கு சுமார் 3 ஆயிரம் கோடி யுவானை ஒதுக்கீடு செய்யத் திட்டமிட்டுள்ளது. தற்போது, பெரும்பாலான திட்டப்பணிகள் நிறைவேற்றியுள்ளன.
நடுவண் அரசின் பெரும் ஆதரவுடன், திபெத்தின் விவசாயிகள் ஆயர்கள் ஆகியோரின் வாழ்க்கை நிலைமை பெரிதும் மேம்பட்டுள்ளது.
|