மேற்கு சீனாவிலுள்ள மகளிர் குழந்தைகள் ஆகியோரின் நிலைமையை மேம்படுத்துவதில், ஐ.நா. குழந்தைகள் நிதியமான யுனிசெப் படிப்படியாக மேலதிக கவனம் செலுத்தும். எதிர்காலத்தில் சீன அரசுடன் ஒத்துழைப்பு மேற்கொள்ளும் நிகழ்ச்சிகள் மேற்குப் பகுதியில் செறிந்திருக்கும்.
இந்நிதியத்தின் நிர்வாகத் தலைவர் கேரோல் பெல்லாமி, 2ந் நாள் பெய்ஜிங்கில் செய்தியாளருக்கு அளித்த பேட்டியில் இதைத் தெரிவித்தார். சீனப் பொருளாதார வளர்ச்சி பெரும் சாதனை பெற்றுள்ளது. ஆனால், மேற்குப் பகுதியில், வறுமைப் பிரச்சினை தொடர்ந்து நிலவுகின்றது. கிழக்குப் பகுதிக்கும் மேற்கு பகுதிக்குமிடையில் குறிப்பிடத்தக்க அளவு இடைவெளி நிலவுகிறது. வெவ்வேறான பகுதிகளிலான குழந்தைகளின் வாழ்வு மற்றும் உடல் நல நிலைமைகளுக்கிடையிலான இடைவெளியைக் குறைப்பதற்கு உதவிட, யுனிசெப் விரும்புவதாக அவர் தெரிவித்தார்.