• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-09-03 15:31:13    
நெடுஞ்சாலைக்கான அடிப்படை சாதன கட்டுமானம்

cri

நெடுஞ்சாலைத் மற்றும் நீர் போக்குவரத்து துறைகளின் அடிப்படை சாதன கட்டுமானத்தை சீனா விரைவுப்படுத்தும் 2010ல் இத்துறைகளிலான நெருக்கடி நிலைமை பன்முகங்களிலும் தளர்ச்சியடையும் என்று செப்டெம்பர் திங்கள் 3ம் நாள் பெய்சிங்கில் நிறைவடைந்த போக்குவரத்து துறையின் தொடர வல்ல வளர்ச்சி பற்றிய சீனாவின் முதலாவது கருத்தரங்கில் கிடைத்த செய்தி கூறுகின்றது. கடந்த 20க்கும் அதிகமான ஆண்டுகளில் சீனா இத்துறையிலான அடிப்படை வசதி கட்டுமானத்தை தொடர்ந்து வலுப்படுத்தியுள்ளது. 2003ம் ஆண்டின் இறுதி வரை சீனாவில் நெடுஞ்சாலையின் மொத்த நீளம் 18 லட்சத்துக்கும் அதிகமான கிலோமீட்டரை எட்டியுள்ளது. கிராமங்கள் மற்றும் வட்டங்களின் 92 விழுக்காட்டு நிர்வாக கிராமங்களில் நெடுஞ்சாலைகள் உண்டு. அதேவேளையில் சீனாவில் 30 ஆயிரம் கிலோமீட்டர் நீளமான உயர் வேக நெடுஞ்சாலைகள் கட்டியமைக்கப்ப்டடுள்ளன. இது உலகில் 2வது இடம் வகிக்கின்றது. தற்போது சீனாவில் 10 ஆயிரம் டன் எடையுள்ள கப்பல் தங்கு துறைகளின் எண்ணிக்கை 900 ஆகும். 2003ம் ஆண்டு அவை கையாளும் ஆற்றல் அளவு 300 கோடிக்கும் அதிகமான டன்னையும், கொள்கல மூல அளவு 48 ஆயிரம் கோடி டன்னையும் தாண்டின. இவையனைத்தும் உலகில் முதலிடம் வகிக்கின்றன.

சீனப் போக்குவரத்து அமைச்சகத்தின் துணை அமைச்சர் குன் மன் யுன் இக்கருத்தரங்கில் உரைநிகழ்த்துகையில் கூறுகிறார். போக்குவரத்து துறை சீனத் தேசிய பொருளாதார வளர்ச்சியின் பலவீன தொடராகும். நெடுஞ்சாலை மற்றும் நீர் போக்குவரத்துத் துறைகளின் மொத்த அடிப்படை சாதன அளவு போதாது. தரமும் அவ்வளவு உயர்வாக இல்லை. முதலிய பிரச்சினைகள் உண்டு. ஆகவே நெடுஞ்சாலை மற்றும் நீர் போக்குவரத்து துறையின் வளர்ச்சியானது போக்குவரத்து பணியின் முக்கிய கடமையாகும் என்றார் அவர்.

மதிப்பீட்டின் படி 2020ல் சீனாவின் நெடுஞ்சாலை மற்றும் நீர் போக்குவரத்து மூலம் பயணிகள் மற்றும் சரக்குகளை ஏற்றிச் செல்லும் அளவு 2000ம் ஆண்டில் இருந்ததை விட சுமார் 2 மடங்கு அதிகரிக்கும். அதேவேளையில் போக்குவரத்து சேவை வடிவம், அம்சம் மற்றும் தரம் மீது மேலும் உயர்வான கோரிக்கை முன்வைக்கப்படும். பாதுகாப்பு, விரைவு, சுகம் மற்றும் தனிநபர் தன்மைமயமாக்க சேவையை மக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்க்கும் குறிக்கோளாகும்.

இதற்காக 1990ல் நாடு தழுவிய நெடுஞ்சாலை மற்றும் நீர் போக்குவரத்தை மையமாக கொண்ட வலைப்பின்னலையும் துறைமுகத்தின் கட்டுமானத்தை விரைவுப்படுத்தும் திட்டத்தையும் சீனா முன்வைத்தது. அதேவேளையில் இதற்கான அடிப்படை சாதன கட்டுமானத்துக்கான முதலீட்டை அரசு அதிகரித்துள்ளது. எடுத்துக்காட்டாக 1998ம் ஆண்டு முதல் நெடுஞ்சாலை கட்டுமானத்தில் சீன அரசாங்கம் செலவிட்ட தொகை ஆண்டு தோறும் 30 ஆயிரம் கோடி ரன்மின்பி யுவானைத் தாண்டியுள்ளது.

சீனப் போக்குவரத்து துறையின் துணை அமைச்சர் குன் மென் யுன் இது பற்றி கூறியதாவது, பயன்படுத்தப்படக் கூடிய அனைத்து நிதி, திறமைசாலி, முன்னேறிய தொழில் நுட்பம், நிர்வாக அனுபவம் ஆகியவை உள்ளிட்ட போக்குவரத்து வளர்ச்சி மூலவளத்தைச் சீனா முழுமையாக அணிதிரட்டி உட்புகுத்தும். தேசியப் பொருளாதார மற்றும் மக்களின் வாழ்க்கையுடன் தொடர்புடைய போக்குவரத்து அடிப்படை சாதனங்களை கட்டியமைக்க அது சக்தியை குவித்து விடும். திட்டத்தின் படி சீனாவின் தற்போதைய நெடுஞ்சாலை மற்றும் நீர் போக்குவரத்து துறையில் காணப்பட்ட நெருக்கடி நிலைமை 2010ல் முழுமையாக தணிவடையும். தேசியப் பொருளாதார கட்டுப்பாட்டு சூழ்நிலை மேம்படும் என்றார் அவர்.

2007ம் ஆண்டின் இறுதியில் சீனாவில் தேசிய நெடுஞ்சாளைகளின் கட்டுமானம் நிறைவேறும். நாட்டின் முக்கிய நகரங்களை இணைக்கும் முக்கிய நெடுஞ்சாலை வலைப்பின்னல் உருவாகும்.