மலர்ச்சோலை நிகழ்ச்சி பற்றிக் காண்போம்.
--இதில் பல அறிய தகவல்கள் இடம்பெறுவது வரவேற்கத்தக்கது. இயந்திர மனிதன் பற்றியும், குப்பைக்குப் பதில் உணவுப் பொருள் வழங்குவது பற்றியும் கேட்டு வியப்படைந்தேன் என்கிறார் மறைமலைநகர், C.மல்லிகாதேவி.
--சீனாவில் தற்போது தயாரித்து வெளியிட்டுள்ள இயந்திர மனிதன் பற்றி மிகவும் விரிவான முறையில் வழங்கப்பட்ட செய்தி மிகவும் சிறப்பாக இருந்தது என்கிறார் நெய்வேலி, A.M.சுப்ரமணியன்.
--சீன மக்கள், மே நாள் விடுமுறையைப் பயன்படுத்தி, ஒய்வு எடுக்கிறார்கள். வெளியூர், வெளிநாடு செல்கின்றனர். மே மாதத்தில், இப்படி எல்லாம் செலவு செய்து மகிழ்ச்சியாக வாழ்கிவதை அறிந்தேன் என்கிறார் சேந்தமங்கலம், M.சந்தானம்.
இசை நிகழ்ச்சியில், உங்களுக்கு சீன பாடல் வேண்டுமா?தமிழ் பாடல் பிடிக்கிறதா?கடிதம் மூலம் தகவல் தாருங்கள்.
--சர்வதேச உழைப்பாளர் நாளை முன்னிட்டு, உழைப்பாளரின் உழைப்புச் சிறப்பை போற்றும் சீனப்பாடல்களை ஒலிபரப்பியதற்கு நன்றி. சீனப் பாடல்களை உள்ளடக்கிய இசை நிகழ்ச்சிகளை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன் என்கிறார் வளவனூர் புதுப்பாளையம், S.செல்வம்.
--நீருக்கும் காதல் என்ற பாடல் கேட்டேன். இப்படியெல்லாம், நாள் பார்த்து அந்நாளின் சிறப்பைப் பார்த்து நிகழ்ச்சிகளை வழங்குவது, சீன வானொலியின் தமிழ்ப் பிரிவின் சிறப்புத்தான் என்கிறார் ராமியம்பட்டி, S.பாரதி.
உங்கள் குரல் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் பல நேயர்கள் விரும்புகின்றனர். இதில், அவர்களின் கருத்துக்களையும் அனுபவங்களையும் நேரடியாக கேட்க முடிவது. சிறப்புக்குரியது.
--திருச்சி நேயர் மன்ற உறுப்பினர்கள், சிறப்பாக பங்கெடுத்தனர். புதிய நேயர்களும் கருத்து தெரிவித்து இருந்தது சிறப்புக் குறியது. நன்றாக ஒலிப்பதிவு செய்து இருந்தார்கள் என்கிறார், மீனாட்சிபாளையம், கே.அருண்.
--சில நேயர்களை வளவிடாமல் தடுக்கும் குறிப்புக்களை, அல்லூர் P.ராதாகிருஷ்ணன் வழங்கியது அருமை. பண்பலைகளின் கவர்ச்சியால், பிற வானொலிகளின் மீதான கவனத்தைக் கைவிட்டுவரும், நேயர்களை எண்ணி துறையூர் சரவணன், வருந்தியதில், எங்களுக்கும் பங்குண்டு என்கிறார் செல்லூர், N.சீனிவாசன்.
நலவாழ்வுப் பாதுகாப்பு, சீன உணவு அரங்கம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் மூலமாக, பயனுள்ள தகவல்களை நேயர்கள் பெறமுடிகிறது. அது பற்றிய கருத்துக்கள் இதோ.
--இனிப்புக்கு இனிப்பு சேர்ப்பது போல, இந்த நிகழ்ச்சி, எமது குடும்பத்தினர் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். மருத்துவ குணம், உடல் நலப் பாதுகாப்பு குறித்துக் கூறும் பொழுது, சீன வானொலி மருத்துவர் போல, எங்களை வழி நடத்திச் செல்கிறது. பாராட்டுகின்றோம் என்கிறார் திருச்சி, G.பிரபாகரன்.
--செல்லிட தொலைபேசியை, உடலின் இடது பாகத்தில் வைத்துக் கொள்வதன் நலனையும், காரணத்தையும் அறிந்து கொண்டேன். உடற்பயிற்சியின் போது எந்த விதமான ஆடைகளை உடுத்த வேண்டும் என்று கூறியது அருமை என்கிறார் கைத்தறி நகர், J.D.மணிகண்டன்.
--சுற்றுலா செல்லும் போது கவனிக்க வேண்டிய தகவல்களை மிக எளிதாக, அருமையான முறையில், எடுத்துக்கூறினீர்கள். தேவையான பொருட்களை மட்டுமே எடுத்துச் செல்ல வேண்டும். வேண்டாதவைகளைத் தவிர்க்க வேண்டும் என்பது நல்ல கருத்துதான் என்கிறார் 30 பள்ளிப்பட்டி, A.கமலம்.
--இறைச்சி முட்டை வறுவல் பற்றிய நிகழ்ச்சி நன்றாக இருந்தது. சீன உணவு அரங்கத்தில், நூடுல்ஸ் மற்றும் சீன சூப் வகைகள் பற்றி, தொடர்ந்து கூறிட வேண்டும் என்கிறார் 30 பள்ளிப்பட்டி, N.கார்த்திகேயன்.
--வேர்க்கடலை, உப்பு, நீர், வெள்ளரி போன்ற பொருட்களை மட்டுமே கொண்டு தயாரிக்கும் உணவுப் பொருள் எவ்வளவு நன்றாக இருக்கும் என்பதற்கு, அருமையான எடுத்துக்காட்டு உங்கள் நிகழ்ச்சி, எளிய பொருட்களைக் கொண்டு தரம் மிகுந்த உணவுப் பொருள் தமாரிப்பது பற்றிக் கூறிய சீன வானொலிக்கு நன்றி என்கிறார் பாண்டமங்கலம், P.R.கார்த்திகேயன்.
|