• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-09-06 14:10:40    
சீனப் பிரதிநிதிக் குழுவின் பாராட்டு விழா

cri

செப்டம்பர் 2ந் நாள், ஏதன்ஸ் ஒலிம்பிக் விளையாட்டு போட்டி பற்றிய தொகுப்பு மற்றும் பாராட்டு விழா பெய்சிங் மக்கள் மாமண்டபத்தில் நடைபெற்றது. சீனத் தேசிய விளையாட்டு நிர்வாகத் தலைவர் யுவான் வெய் மின் விழாவில் உரைநிகழ்த்தினார். ஏதன்ஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் சீன விளையாட்டுப் பிரதிநிதிக் குழு திட்டமிட்ட குறிக்கோளை நிறைவேற்றியுள்ளது. சீனாவின் போட்டி விளையாட்டுத் துறையின் தொடர வல்ல வளர்ச்சி, ஒட்டுமொத்த ஆற்றலை மேலும் பன்முகங்களிலும் அதிகரிப்பது ஆகியவற்றுக்கு இது வாய்ப்பினை உருவாக்கியுள்ளது. நம்பிக்கையை அதிகரித்துள்ளது. தாய்நாட்டுக்கும் மக்களுக்கும் மனநிறைவு தந்துள்ளது என்று அவர் கூறினார்.

ஆகஸ்ட் திங்கள் 13ந் நாள் முதல் 29ந் நாள்வரை நடைபெற்ற 28வது கோடைகால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் சீனப் பிரதிநிதிக் குழுவின் 407 விளையாட்டு வீரர்களும் வீராங்கனைகளும் திறமையுடன் போட்டியிட்டு, 26 விளையாட்டுகளைச் சேர்ந்த 203 போட்டி நிகழ்ச்சிகளில் 32 தங்கம் 17 வெள்ளி மற்றும் 14 வெண்கல பதக்கங்களைப் பெற்று. தங்கப் பதக்கப் பட்டியலில் இரணாடாம் இடம் வகிக்கின்றனர். மொத்தம் 6 உலக சாதனைகள புதுப்பித்துள்ளனர், ஒரு உலக சாதனையை சமன் செய்தனர். 17 ஒலிம்பிக் சாதனைகளை முறியடித்தனர். அவர்கள் தாய்நாட்டுப் பெருமை பெற்று தந்துள்ளனர் என்று யுவான் வேய் மின் சுட்டிக்காட்டினார்.

ஏதன்ஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில், நீர் குதிப்பு, துப்பாக்கிச் சூடும் நிகழ்ச்சி, மேஜை பந்து, பூப் பந்து, பளு தூக்கல் ஆகிய நிகழ்ச்சிகளில் சீன அணி தொடர்ந்து மேம்பாட்டை நிலைநிறுத்தியுள்ளது. வாள் போட்டி, மகளிருக்கான மிதி வண்டி, மகளிருக்கான மல் யுத்தப் போட்டி, மகளிருக்கான அம்பு ஏய்தல் போட்டி முதலிய நிகழ்ச்சிகளில் பெரும் முன்னேற்றம் காணப்பட்டுள்ளது. தடகளப் போட்டி, நீச்சல் உள்ளிட்ட சில நிகழ்ச்சிகளில் 4 தங்கம் 2 வெள்ளி பதக்கங்கள் பெற்று வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முன்னேற்றம் காணப்பட்டுள்ளது. மகளிருக்கான கை பந்து அணி, 20 ஆண்டுகளுக்குப் பின், ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் மீண்டும் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. தம்மை தாமே வலுவடையச் செய்வது, சுய நம்பிக்கை, தன்னை வென்றெடுத்து எதிரணியினரை தோற்கடிக்கத் துணிவது என்ற சிறந்த தேசிய எழுச்சியை வெளிப்படுத்தியுள்ளனர் என்று யுவான் வெய் மின் சுட்டிக்காட்டினார். இந்த சாதனை பெற்றதற்கு காரணங்கள் உண்டு. சீனக் கம்யுனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டி மற்றும் அரசவையின் சரியான தலைமை, கடல்கடந்த சீன மக்கள் உள்ளிட்ட அனைத்து சீன மக்களின் பெரும் ஊக்கமும் உதவியும் நுணுக்கமான ஏற்பாட்டுப் பணி, நிலைமையைக் கட்டுப்படுத்தும் பயனுள்ள ஆணியிட்டமை, அறிவியல், மருத்துவம், பிரச்சாரம், வெளிநாட்டுத் தொடர்பு மற்றும் பாதுகாப்பு துறைகளின் வலுவான ஆதர்வு, பயனுள்ள ஊக்க மருந்து எதிர்ப்பு பணி முதலியவை அவற்றில் இடம்பெறுகின்றன.

இந்த போட்டியில் சீனாவின் 152 விளையாட்டு வீரர்கள் ஊக்க மருந்து பரிசோனை செய்யப்பட்டனர். எவரும் பிரச்சினைக்குள்ளகவில்லை என்று யுவான் வெய் மின் குறிப்பிட்டார். பெய்சிங் ஒலம்பிக் விளையாட்டுப் போட்டி எங்களுக்கு நெருங்கி வருகின்றது. சம்பியன் பட்டப் பரிசு பெறும் மேடையிலிருந்து இறங்கியதும் புதிய பணி துவங்கியுள்ளது என்று சீன விளையாட்டு துறையில் அடிக்கடி கூறப்படும் ஒரு வார்த்தையாகும் என்று யுவான் வெய் மின் இறுதியில் கூறினார். ஏதன்ஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் பெற்ற விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு விளையாட்டுத் துறை கௌரவ பதக்கம் வழங்குவதாக சீனத் தேசிய விளையாட்டு நிர்வாகத்தின் கட்சிக் கமிட்டிச் செயலாளரும் நிர்வாகத்தின் துணைத் தலைவருமான லீ சி ச்சியன் விழாவில் அறிவித்தார். இத்துடன் தமிழ்ச் செல்வம் தொகுத்து வழங்கிய விளையாட்டு செய்திகள் நிகழ்ச்சி நிறைவடைகின்றது.