• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-09-07 17:01:45    
ஆசிய அரசியல் கட்சிகளின் 3வது உலக மாநாடு பற்றிய சிறப்பு நிகழ்ச்சி

cri

ஆசிய அரசியல் கட்சிகளின் 3வது மாநாடு செப்டம்பர் திங்கள் 5ம் நாள் பெய்ஜிங்கில் நிறைவடைந்தது, ஆசிய-ப்சிபிக் பிரதேசத்தின் பரிமாற்றத்தையும் ஒத்துழைப்பையும் வலுப்படுத்துவது எனும் நோக்கத்துடன் கூடிய பெய்சிங் அறிக்கை இம்மாநாட்டில் வெளியிப்பட்டது. ஆசிய கட்சிகளுக்கிடையிலான ஒத்துழைப்பு குறித்து இம்மாநாடு தெளிவான திசையை சுட்டிக்காட்டி, மேலும் உறுதியான அடிப்படை வழங்கியுள்ளதாக மாநாட்டில் கலந்துக் கொண்டோர் கருதுகின்றனர். 3 நாள் நீடிக்கும் மாநாட்டில் 35 ஆசிய நாடுகளின் 80 கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். பரிமாற்றம் ஒத்துழைப்பு வளர்ச்சி எனும் இம்மாநாட்டின் தலைப்பு பற்றி, பிரதேச பாதுகாப்பு மற்றும் பலதரப்பு ஒத்துழைப்பு, பொருளாதார அதிகரிப்பு மற்றும் சமூக முன்னேற்றம், அரசியல் கட்சியின் கட்டுமானம் நாட்டின் வளர்ச்சி ஆகியவை பற்றி அவர்கள் ஆழமாக விவாதித்தனர். பிரதேச பரிமாற்றத்தையும் ஒத்துழைப்பையும் விரிவாக்குவது பொதுவான வளர்ச்சியை முன்னேற்றுவிப்பது பற்றி அவர்கள் விவாதித்து ஒத்த கருத்துக்கு வந்தனர் இது 2004ம் ஆண்டின் பெய்சிங் அறிக்கையில் இடம் பெற்றுள்ளது. செப்டெம்பர் திங்கள் 5ம் நாள் முற்பகல் அவர்கள் சீனாவின் மோட்சக் கோயில் எனும் புகழ்பெற்ற பூங்காவில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டனர். மாநாட்டு அமைப்புக் கமிட்டியின் துணைத் தலைவரும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் வெளி விவகார வாரியத்தின் தலைவருமான wangjiari விழாவில் உரை நிகழ்த்தினார். இன்று நாங்கள் மோட்சக் கோயிலில் அமைசிக்குப் பெயர் எழுதுவது எனும் நடவடிக்கை மேற்கொள்கிறோம் ஆசிய மக்களின் சமாதானத்தை விரும்பும் வாழ்த்துக்களை இது தெரிவிக்கிறது. தாய்லாந்தின் வெளியுறவு அமைச்சர் இவ்விழாவில் உரை நிகழ்த்தினார். அவர் இம்மாநாட்டில் மகிழ்ச்சியுடன் கலந்துக் கொண்டார். இம்மாநாடு நடத்துவதில் சீன கம்யூனிஸ்ட் கட்சி பெரும் வெற்றி பெற்றுள்ளது. சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சிறப்பு அமைப்பு மற்றும் இணக்க பணியை பல்வேறு நாடுகளின் அரசியல் கட்சிகள் உயர்வாக மதிப்பிட்டுள்ளன. இந்திய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ரஸ்வீ செய்தியாளருக்குப் பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி இம்மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியுள்ளது. இது மூன்று முறை மிகவும் வெற்றிகரமாக நடைபெற்றது என்றார் அவர்.

சீன-இலங்கை உறவும் இலங்கையிலான பிரச்சினையை தீர்பதற்கும் ஆகியவற்றில் இலங்கை சீனாவின் அனுபவம் கற்று க் கொள்ள வேண்டும். நாட்டை ஆள்வது கட்சி கட்டுமானம் ஆகியவற்றிலான அனுபவத்தை பல்வேறு கட்சிகள் பரிமாறிக் கொள்ளும் அரங்காக இம்மாநாடு விளங்கியது. சீன கம்யூனிஸ்ட் கட்சியின் வெற்றிகரமான அனுபவத்தை அவர்களும் அவர்தம் நாடுகளும் கற்றுக்கொள்ள வேண்டும். ஆசிய நாணய நெருக்கடியைக் கையாள்வதற்கான வெற்றிகரமான கொள்கை, சீன கம்யூனிஸ்ட் கட்சி பொது மக்களுடன் நெருக்கமாக இணைவது, வறுமையிலிருந்து விலகி பணம் ஈட்டி நல்ல வாழ்க்கை நடத்துவது, சீனாவின் சீர்கேட்டு எதிர்ப்பு கொள்கை ஆகியவற்றை அவர்கள் சிறப்பாக கற்றுக்கொள்ள வேண்டும். சீன கம்யூனிஸ்ட் கட்சி இம்மாநாட்டின் வாயிலாகப் பயன் பெற்றுள்ளது. இம்மாநாட்டில் சீன கம்யூனிஸ்ட் கட்சி தனது கொள்கையை எடுத்துக் கூறியது.

பல்வேறு கட்சிகளும் இம்மாநாட்டின் போது சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் கலந்தாய்வு நடத்தின. சீன கம்யூனிஸ்ட் கட்சி வெளிப்படையான கட்சியாகும். விவாதத்தின் போது பிற கட்சிகளின் முன்னேற்ற அனுபவத்தை நாங்கள் கற்றுக் கொண்டோம். ஆசியாவின் பல்வேறு நாடுகளுக்கிடையிலும் கட்சிகளுக்கிடையிலுமான பரிமாற்றத்துக்கும் ஒத்துழைப்புக்கும் ஒரு முக்கிய இடம் கிடைத்துள்ளது என்றார் அவர்.