• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-09-10 10:12:45    
நேயர்களின் கருத்துக்கள் 18

cri
பிற நிகழ்ச்சிகள் பற்றிய கருத்துக்கள்

--சீனத் தேசிய இனக்குடும்பம் நிகழ்ச்சியில், சிங்சியாங்கின் இயற்கை அமைப்பு, வரலாறு, பண்பாடு, அரசியல், பொருளாதாரம் ஆகியவற்றால், உலகின் கவனத்தை ஈர்ப்பதாக அது அமைந்துள்ளது என்பதில் ஐயமில்லை. அதன் சூழலை நன்கு பயன்படுத்தி, அதை வளமிக்க பிரதேசமாக மாற்றியுள்ளதைக் காண்கிறேன் என்கிறார் மணமேடு, M.தேவராஜா.

--சீனத் தேசிய இனக்குடும்பம் நிகழ்ச்சி மூலம், குரங்கு வகைகள், வளர்ப்பு முறைகள் பற்றி, மிகவும் தெளிவாக தெரிந்து கொண்டேன் என்கிறார் குருவம்பட்டி, T.குமார்.

--வறுமை ஒழிப்பு எனும் செய்தித்தொகுப்பைக் கேட்டேன். ஒரு நாட்டில் வறுமை என்பதினை முற்றிலுமாக ஒழிப்பது என்பது அத்தணை எளிதல்ல. இருந்தபோதும், கடந்த 20 ஆண்டுகளில், சீன அரசு தொடர்ந்து பாடுபட்டு வருகிறது. அதில் நல்ல முன்னேற்றமும் கண்டுள்ளது என்கிறார், திருச்சி அண்ணாநகர், V.T.ரவிச்சந்திரன்.

--தங்கள் நிகழ்ச்சிகள் என்னை வெகுவாக கவர்ந்துள்ளன என்கிறார் திருச்செங்கோடு, எஸ்.சிஙகாரவேல்.

செய்திகள் மற்றும் செய்தித்தொகுப்பு பற்றிய கருத்துக்கள்.

--2006ம் ஆண்டில், இணையத்தை பயன்படுத்துவதில் சீனா, உலகில் முதலிடம் பெறும் என்பதை செய்திகளில் அறிந்தேன் என்கிறார் மேல்மாயில், V.ரங்கோலிராதாகிருஷ்ணன்.

--வேலை வாய்ப்பு பற்றிய கருத்தரங்கம் எனும் நிகழ்ச்சியினை, செய்தித்தொகுப்பு மூலம் அறிந்தேன். சீனாவில் வேலை வாய்ப்பை உருவாக்கும் கொள்கை பற்றிய முக்கிய விவாதங்களில் 20க்கு மேற்பட்ட நாடுகள் கலந்து கொண்டு, தொழிற்துறையில் வேலை வாய்ப்பை முன்னேற்றுவித்து, வேலை வாய்ப்பினை உருவாக்குவது பற்றிய திட்டம் இட்டுள்ளன என்கிறார் 30 பள்ளிப்பட்டி, P.கேசவன்.

--இவ்வாண்டின் முதல் மூன்று திங்களில் சீனாவில் நகரங்களில் பதிவு செய்யப்பட்ட வேலையற்றோர் எண்ணிக்கை 81 லட்சத்தை எட்டியுள்ளது. சீன உழைப்பு மற்றும் காப்பீட்டு துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரம் இதை அறிவித்துள்ளது. இங்கு மனித நேயம் என்பது சிறப்பாக செயல்பட்டுள்ளது. அதற்கு சீன அரசு உறுதுணையாக உள்ளது என்கிறார் துறையூர், G.ரமேஷ்.

--தற்போது சீனாவின் வேளாண் துறையில் உயரிய புதிய தொழில் நுட்பத்தை உட்புகுத்தி வேளாண் சாதனையை ஈட்டி வருவதை செய்திகளில் அறியத்தந்தீர்கள். அதிக மக்கள் தொகையினை கொண்ட சீனா, அதன் உணவு, தாணிய தேவைகளை தீர்க்க தனது தொழில் நுட்ப ஆற்றலை பயன்படுத்தி வருகிறது. இது பயனுள்ள அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சியாகும் என்கிறார் திருச்சி அண்ணாநகர், V.T.ரவிச்சந்திரன்.

--சீனாவின் திபெத்தின் மேற்குப் பகுதியில் வறுமை ஒழிப்பு நடவடிக்கைப் பணி வெற்றிகரமாக மேற்கொள்ளப்படுவதைக் கண்டு, நான் மிக மகிழ்ச்சி அடைகின்றேன். திபெத் மக்களின் நபர்வாரி சராசரி வருமானம் சுமார் 1200 யுவானுக்கு உயர்ந்து இருப்பது, அவர்களின் வாழ்க்கை தர உயர்வினை எடுத்துக்காட்டுகிறது என்று, சிறுநாயக்கன்பட்டி, கே.வேலுச்சாமி.

நல வாழ்வு பாதுகாப்பு நிகழ்ச்சி பற்றிக் காண்போம்.

--ஒவ்வொரு மணிதனும் தன் வாழ் நாளில் நடப்பது உலகத்தையே 5 முறை சுற்றி வந்தது போல் நடக்கின்றான். அதிக வெப்பத்திலும் அதிக குளிரிலும் பணியாற்றும் ஊழியர்களுக்கு காலணி பயன்கள் பற்றியும். வியர்வையை உறுஞ்சும் காலணிகள் பற்றியும் கூறப்பட்டது மிகவும் பயன் உள்ளதாக இருந்தது என்கிறார் ராசிபுரம், R.M.மோகன்.

--சுற்றுலாவின் போது பின்பற்ற வேண்டியவை பற்றி கேட்டேன். சுற்றுலா பயணத்தில் உட்பு, இனிப்பு பொருள் பழம் போன்றவற்றை கொண்டு செல்ல வேண்டும் என்பதை அறிந்தேன். பயனுள்ளதாக இருந்தது. களைப்பு நீக்கும் வைட்டமின் பெறலாம் எனவும் அறிந்தேன் என்கிறார், இவலம்பாடி, V.வினாயகமூர்த்தி.

--இதில், நாம் சமைக்கும் போது பயன்படுத்த உள்ள காய்கறிகளை பெரிதாக நிறுக்க வேண்டும் என்று கூறியது. மிகச் சரியானது. இங்கும் அதைத்தான் ஆலோசனையாகக் கூறுகிறார்கள். சமையலிலும் இந்தி சீன ஒற்றுமை வெளிப்படுகிறது என்கிறார் விழுப்புரம், S.பாண்டியராஜன்.

--காலணிகள் பற்றி கூறப்பட்டது. பார்வை இல்லாதவர்கள் அணிகிற காலணிகள் பற்றி கூறப்பட்டது. இத்தகைய காலணிகள் உள்ளன என்பதை கேட்டு வியந்து போனேன். இதைப் போன்ற காலணிகளைப் பார்க்க வேண்டும். என்ற ஆவல் என் மனதை தூண்டுகிறது. ஒரு அருமையான நிகழ்ச்சியை வழங்கிய கலையரசிக்கு நன்றிகள் என்கிறார் சேந்தமங்கலம், K.சுந்தரம்.