செப்டெம்பர் திங்கள் 10ம் நாள் சீனாவின் ஆசிரியர் விழா நாளாகும். இதை முன்னிட்டு சீன அரசாங்க மற்றும் கல்விக்குப் பொறுப்பான வாரியங்கள் ஆகிவற்றின் ஏற்பாட்டில் பாராட்டு விழா, கலந்துரையாடல் கூட்டம் போன்ற நடவடிக்கைகள் நடைப்பெற்றன. நடவடிக்கைகளில் தலைசிறந்த ஆசிரியர்கள் பாராட்டப்பட்டனர். ஆசிரியரின் ஒழுக்க நெறி, கல்வியறிவு ஆகியவை வலுப்படுத்தப்பட வேண்டும் என்று முன்வைக்கப்பட்டது. இன்று பெய்சிங்கில் சீன கல்வி அமைச்சகம் உள்ளிட்ட வாரியங்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற பாராட்டு கூட்டத்தில் பல்வேறு இடங்களின் 2800 தலைசிறந்த ஆசிரியர்கள் பாராட்டப்பட்டனர். சீனக் கல்வி அமைச்சர் சோச்சி நாடு முழுவதிலுள்ள ஒரு கோடியே 25 லட்சம் ஆசிரியர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். தலைசிறந்த ஆசிரியர்களைப் பின்பற்றி மாணவர்களை போஷித்து வளர்ப்பதென்ற சிந்தனையை அடிப்படையாக கொண்டு தம் ஒழுக்க நெறி கல்வியை வலுப்படுத்த வேண்டும் என்று அவர் நாடு தழுவிய ஆசிரியர்களைக் கோரினார்.
ஆசிரியர் அணியில் தலைசிறந்தவரை மாதிரியாக கற்றுக் கொள்ள வேண்டும். அவர்களைப் பிரச்சாரம் செய்ய வேண்டும். ஆசிரியர்களின் கடப்பாட்டையும் பொறுப்பு தன்மையையும் வலுப்படுத்த வேண்டும். பரந்தளவிலான ஆசிரியர்கள் மாணவர்களுக்குப் பாடம் சொல்லி அவர்களை போஷித்து வளர்ப்பதென்ற லட்சியத்தை தமது சொந்த துறையாக கருத வேண்டும். மாணவர்களின் மீது அன்பு காட்ட வேண்டும். உயரிய நடைமுறை மூலம் ஒழக்க நெறி, விவேகம், உடல் நலம், நாகரிகம் ஆகியவற்றில் பன்முகங்களிலும் வளர்க்க மாணவர்கள் வழிக்காட்ட வேண்டும என்றார் அவர். ஜனநாயகம், சமத்துவம் ஆகியவை நிறைந்த ஆசிரியர்-மாணவர் உறவை நிறுவுவது என்பது ஆசிரியர்களுக்கு ஒழுக்க நெறி ரீதியில் கல்வி புகட்டுவதன் மைய அம்சமாகும் என்று பெய்சிங் ஆசிரியர் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சன் வென் போ கருத்து தெரிவித்தார் மாணவர்களை அடிப்படையாக கொண்ட ஜனநாயகம், சமத்துவம் வாய்ந்த புதிய ரக ஆசிரியரி மாணவர் உறவை நிறுவுவது நவீன கல்வியின் அடிப்படை கோரிக்கையாகும். ஆசிரியர்களுக்கு கல்வி புகட்டும் மைய உள்ளடக்கமாகும். ஆசிரியர்-மாணவர் உறவின் ஜனநாயகம் சமத்துவம் ஆகியவை முக்கியமாக மாணவர்களின் மீதான ஆசிரியரின் புரிந்துணர்வு, உதவி, அன்பு, மதிப்பு ஆகியவற்றைக் குறிக்கின்றது என்று பேராசிரியர் கூறினார்.
சீனாவின் சந்தை பொருளாதாரத்தின் வளர்ச்சியுடன், சில ஆசிர்யர்கள் பொருளாதார நலனில் அளவுக்கு மீறி கவனம் செலுத்துகின்றனர். மேன்மேலும் அதிகமான பணம் பெறும் வகையில், தத்தமது பொதுவான கல்வி பணியில் குறைவு ஆற்றலுடன் ஈடுப்பட்டு, குடும்ப கல்வியில் முக்கிய ஆற்றலுடன் பாடுபடுகின்றனர். குறிப்பிடத்தக்க அளவில் இது குறித்து மாணவர்களும் மாணவர்களின் தாய்களும் தந்தைகளும் மன நிறைவு அடையவில்லை மட்டுமல்ல, ஆசிரியர்களின் செல்வாக்கும் சீர்குலைக்கப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக, பொருளாதார நலனுக்கு குறைவு கவனம் செலுத்தும் கல்வி சில நகரங்களிலான ஆசிரியர்களில் மேற்கொண்டுள்ளது. எடுத்துக்காட்டாக, சீனாவின் நாங்கின் நகரில் 60 இடைநிலை மற்றும் துவக்கப்பள்ளி ஆசிரியர்கள் இது பற்றி முன்மொழிவு தெரிவித்தனர். ஆசிர்யர்கள் உண்மையான உணர்வுடன் கல்வித் துறையில் ஈடுபட்டு பணம் பெறுவதற்கான குரும்ப ஆசிரியராக விளங்க முடியாது என்று அவர்கள் முன்மொழிந்தனர். பின்னர் பல ஆசிரியர்கள் ஆக்கபூர்வமான எதிரொலி மேற்கொண்டுள்ளனர். நாங்கின் நகரின் ஆசிர்யர்களுடைய சிறந்த குணம் கடந்த சில ஆண்டுகளாக ஆசிர்யர்களுக்கான ஒழுக்க நெறி பற்றிய கல்விக்கு முக்கிய கவனம் செலுத்துவதால் ஏற்பட்ட முடிவு ஆகும் என்று நாங்கின் நகரிலான கல்வித்துறைக்கு பொறுப்பான துணை நகராட்சி சியான் குன் ஹுன் கருதினார். அவர் மேலும் கூறியதாவது. கடந்த சில ஆண்டுகளாக ஆசிரியர் ஒழுக்க நெறி கட்டுமானத்தின் புதிய வழியை நாங்கள் ஆக்கபூர்வமாக ஆராய்ச்சி செய்து, ஆசிர்யர்களின் ஒழுக்க நெறி கட்டுமானத்தின் முன்மாதிரி மற்றும் வழிக்காட்டு அமைப்பு முறையை நிறுவி மேம்படுத்தி வருகின்றோம். உனத்த குறிகோள் ஆசிரியருக்கு ஊக்கம் அளிப்பதில் ஊன்றி நின்று, அவர்களிலான முன்மாதிரிகளை பிரபலமாக்கி, முன்மாதிரி ஆசிர்யர்களின் உனத்த ஒழுக்க நெறியை வெளிக்கொணர். இதனால், உனத்த ஒழுக்க நெறியுடன் கூடிய ஆசிரியரான முன்மாதிரி குழுவை உருவாக்குவதை முன்னேற்றுவித்துள்ளது என்றார் அவர். நாங்கினின் இந்த நல்ல முறை சீனாவின் முழு நாட்டிலும் பிரபலமாக்கப்பட வேண்டும், ஆசிரியர் ஒழுக்க நெறி கல்வி பற்றிய புதிய அமைப்பு முறையை உருவாக்க வேண்டும் என்று சீனாவின் கல்வித்துறை அமைச்சர் சோச்சி தெரிவித்தார்.
|