• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-09-13 19:32:24    
சீன விளையாட்டு வீரர்களின் ஹாங்காங் மகௌ பயணம்

cri

ஏதன்ஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் பெற்ற சீன விளையாட்டு வீரர்கள், பிரதிநிதிக் குழுத் தலைவர் யுவான் வெய்மின்னின் தலைமையில் 6ந் நாள் முற்பகல் ஹாங்காங் அடைந்தனர். ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிரதேசத்தின் நிர்வாக அதிகாரி துங் சியன்குவா, ஹாங்காங்கிலுள்ள நடுவண் அரசின் தொடர்பு அலுவலகத்தின் தலைவர் கௌ சி ரென், முதலியோர் விமான நிலையத்தில் அவர்களை வரவேற்றனர். அங்கு நடைபெற்ற வரவேற்பு விழாவில், உரைநிகழ்த்துகையில், ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற தாய்நாட்டின் விளையாட்டு வீரர்களை ஹாங்காங்கில் வரவேற்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன், நீங்கள் தாய்நாட்டின் பெருமை என்று துங் சியன் குவா கூறினார். பிரதிநிதிக் குழு, ஹாங்காங் வந்து, ஹாங்காங் உடன் பிறப்புகளுடன் இணைந்து ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி தங்கப் பதக்கப் பெருமையை பகிர்ந்துகொள்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைவதாக யுவான் வெய்மின் கூறினார். நீண்டகாலமாக தாய்நாட்டின் விளையாட்டுத் துறைக்கு ஆதரவும் உதவியும் அளித்து வரும் ஹாங்காங் உடன் பிறப்புகளுக்கு அவர் நன்றி தெரிவித்தார். அவர்கள் ஹாங்காங்கில் 3 நாள் தங்கியிருந்தனர். காங் தாவ், சியூ லுங், சின்சியே முதலிய இடங்களிலுள்ள விளையாட்டு அரங்கங்களில், மேசை பந்து, கைப் பந்து, பூப்பந்து, நீர் குதிப்பு முதலிய் நிகழ்ச்சிகளில் காட்சி விளையாட்டுகளில் ஈடுபட்டனர். சென் சுங் ஹோ, சியு ஹைப் போங் உள்ளிட்ட தங்கப் பதக்கம் பெற்ற விளையாட்டு விரர்களின் பயிற்சியாளர்களும் இப்பிரதிநிதிக் குழுவில் இடம்பெறுகின்றனர்.

பிரதிநிதிக் குழு ஹாங்காங்கிலான பயணத்தை முடித்துக் கொண்டு 9ந் நாள் முற்பகல் 11 மணிக்கு கப்பல் மூலம் மகௌ சென்றடைந்தது. அங்கு இரண்டு நாள் பயணம் மேற்கொண்டது. மகௌ சிறப்பு நிர்மாகப் பிரதேசத்தின் நிர்வாக அதிகாரி ஹே ஹோ ஹுவாவும் பல நூறு குடி மக்களும் பிரதிநிதிக் குழுவை வரவேற்றனர். நிர்வாக அதிகாரி ஹே ஹோ ஹுவா அரசு தலைமையகத்தில் பிரதிநிதிக் குழுவினரை சந்தித்துரையாடினார். 9ந் நாள் நடைபெற்ற மாபெரும் கூதூகலக் கூட்டத்தில் குழுவினர் கலந்துகொண்டனர்.

சீனாவின் பல்கலைக்கழக மாணவர் விளையாட்டுப் போட்டி சீனாவின் 7வது பல்கலைக்கழக மாணவர் விளையாட்டுப் போட்டி 6ந் நாள் நிறைவடைந்தது. உபசரிப்பு நகரான ஷாங்கை பிரதிநிதிக் குழு 49 தங்கப் பதக்கம் பெற்று, தங்கப் பதக்கப் பட்டியலில் முதலிம் பெற்றது. குவாங்துங் மாநிலம் 36 தங்கப் பதக்கங்களையும் தியன்சின் மாநகரம் 33 தங்கப் பதக்கங்களையும் பெற்று முறையே 2ம் 3ம் இடம் பெற்றன. ஆனால் அடுத்த பல்கலைக்கழக மாணவர் விளையாட்டுப் போட்டியை நடத்தவுள்ள குவாங்துங் மாநிலம் 1663 புள்ளி என்ற மொத்த சாதனையுடன் முதலிடம் பெற்றது. கைப் பந்து 2008 பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்காக ஆயத்தம் செய்யும் வகையில், உயரமான வீராங்கனைத் தேர்ந்தெடுத்து தேசிய அணியில் சேர்த்துக் கொள்ளவுள்ளதாக சீன மகளிர் கைப் பந்து அணியின் பயிற்சியாளர் சென் சுங்ஹோ 7ந் நாள் தெரிவித்துள்ளார். ஏதன்ஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் கலந்துகொண்ட மகளிர் கைப் பந்து அணிகளில் சீன அணியினரின் சராசரி உயரம் போதாது என்பதுதான் குறை, விளையாட்டு வீராங்கனைகளின் சிறந்த மனநிலையினால் சீன அணி தங்கப் பதக்கம் பெற்றது என்று சென் சுங்ஹோ எடுத்துக் கூறினார். 2008ம் ஆண்டில், ரஷியா, கியூபா, பிரேசில், அமெரிக்கா, இத்தாலி முதலிய அணிகள் தொடர்ந்து சீன அணியின் முக்கிய எதிரணிகளாக விளங்கும் என்று சென் சுங்ஹோ கூறினார்.