• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-09-13 12:42:49    
மீத்தேன் வாயு

cri

சீனாவின் கிராமப்புறத்தில் 20 கோடிக்கும் அதிகமான விவயாயிகளின் குடும்பங்களில் கழிப்பறை உள்ளது. அதேவேளையில் வளர்ப்பு பிராணிகள் ஆண்டுக்கு 200 கோடி டன் உரம் தருகின்றன. இது சரியாக கையாளப்பட வில்லை. இதனால் விவசாயிகளின் வாழ்க்கைத் தரம் பாதிக்கப்படுகின்றது. நோய், தொற்று நோய் முதலியவை பரவுவதற்கு வழிவகுத்துள்ளது. 2000ம் ஆண்டு முதல் சீன வேளாண் அமைச்சகம் இப்பிரச்சினையில் கவனம் செலுத்தி கிராமப்புறத்தில் மீத்தேன் வாயுவை உருவாக்கும் தொழில் நுட்பத்தைப் பரவலாக்க முயற்சி மேற்கொண்டுள்ளது.
மீத்தேன் வாயுவானது, உரம் தாவரங்களின் தண்டு, இலை ஆகியவற்றை ஊற்றி நன்றாக புளித்து நுரைத்த பின் எரிய வல்ல காற்றாகும். அதன் கழிவுப் பொருட்கள் உரமாக பயன்படுத்தப்படலாம்.

சீனாவின் நடுப் பகுதியில் அமைந்துள்ள ஹூபேய் மாநிலத்தின் அன் ஸ் நகர் முதன்மதலில் மீத்தேன் வாயுவை உருவாக்கும் தொழில் நுட்பத்தை நடைமுறைப்படுத்தும் இடங்களில் ஒன்றாகும். இந்நகரின் குன் லோபா எனும் கிராமத்தில் சியான் யி செ எனும் விவசாயியின் இல்லத்தில் வெளியே இருந்த மீத்தேன் வாயு தேக்கத்திலிந்து வீட்டுக்குள் நீடித்த வெள்ளை நிற பிலாஸ்ட்க் குழாய் அறை சுவரின் வழியாக தொங்குகின்றது. அது தான் மீத்தேன் வாயு குழாயாகும். இதன் மூலம் விளக்கு எரிகின்றது. தண்ணீர் சூடுப்படுத்தப்படுகின்றது. சமைப்பதற்கும் இது பயன்படுத்தப்படலாம். இது பற்றி சியான் யி செ அறிமுகப்படுத்துகின்றார்.

 

இந்தப் புதிய ரக மீத்தேன் வாயு, உற்பத்தி தேக்கம் பல நன்மைகளைத் தருகின்றது என்றார் அவர்.

முன்பு எங்கள் கிராமத்தில் சமைப்பதற்காக நிலக்கரி வாங்க வேண்டும். மரம் வெட்ட வேண்டும். இதனால் சுற்றுச் சூழல் நிலை பாதிக்கப்பட்டது. அங்கு பாரம்பரிய முறையில் ஏற்றுமதி செய்யப்பட்ட தேயிலை மாசுபட்டதன் காரணமாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியாமல் போனது. மீத்தேன் வாயு தயாரிக்கும் தொழில் நுட்பம் பரவலான பின் மரம் வெட்டுதல், எங்கெங்கும் காணப்பட்ட பன்றிகழிவு போன்ற நாகரிகமற்ற சூழ்நிலை மாணாமல் போயிற்று. குறிப்பாக விவயாசிகளுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் ஐரோப்பாவுக்கான தேயிலை ஏற்றுமதி மீட்கப்பட்டது. மீத்தேன் வாயு பயன்பாட்டின் மூலம் விவசாயிகளின் வருமானம் அதிகரித்துள்ளது. சியான் யி செ எமது செய்தியாளரிடம் எடுத்துரைக்கிறார்.

கடந்த மூன்று ஆண்டுகளில் நிலக்கரிக்குப் பதிலாக மீத்தேன் வாயுவைப் பயன்படுத்துவதுவதன் மூலம் 500 யுவான் சிக்கனப்படுத்தியுள்ளேன். தவிர கழிவைப் பயன்படுத்துவதன் மூலம் வேதியியல் உரத்துக்கான செலவு மிச்சம். இது மட்டுமல்ல இந்த உரத்தினால் வளர்ந்த தானியம் காய்களிகள், பழங்கள் ஆகியவற்றின் தரமும் உயர்வானது. விளைச்சலும் அதிகம். நல்ல விலைக்கு அவை விற்கப்படுகின்றன. ஆகவே மீத்தேன் வாயுவானது கிராம வாசிகளால் வரவேற்கப்படுகின்றது என்று சியான் யி செ கூறுகிறார்.