• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-09-15 15:07:01    
நேயர்களின் கருத்துக்கள் 19

cri
--உலா வந்த காலணிகளின் பயன்பாடு பற்றி கேட்டதிலே சிறப்பு என்ன எனில், பார்வையற்றோருக்கான காலணி இது சிறப்பு காலணி என்றும், இது அமெரிக்கா தயாரிப்பு என்றும் எதிரில் உள்ள தடை பொருள்களை அறிந்து செல்ல இந்த காலணி மிகவும் பார்வையற்றோருக்கு உதவும் என்பது தங்களின் தொகுப்பில் அளித்த இந்நிகழ்ச்சி சூப்ரே சூப்பர் என்கிறார் ராமியம்பட்டி, S.பாரதி.

--நீர் அதிகம் உறிஞ்சும், பெரிய துண்டாக நறுக்கி சமைப்பது நல்லது என்றதால் எங்களின் குடும்பத்தினர் அனைவரும், பெரிய துண்டாக நறுக்கித்தான் சமைத்து வருகின்றோம். உண்ணையிலேயே நன்றாகத்தான் உள்ளது. உடல் நலத்திற்கு பாதுகாப்பான இந்த நிகழ்ச்சியினை வரவேற்கின்றோம் என்கிறார் திருச்சி காஜாமலை, G.பிரபாகரன்.

--இதில், பாதங்களை சுத்தமாக வைத்துயிருப்பதன் மூலம் ஏற்படுகின்ற விளைவு, மிகவும் தெளிவாகவும் விரிவாகவும் ஒலிபரப்பப்பட்டது. இந்த நிகழ்ச்சியின் மூலம் தான், பாதங்களை சுத்தமாக வைத்துக் கொள்ள வில்லை என்றால், உடலில் மற்ற பாகங்களையும் பாதிக்கும் என்பதை தெரிந்து கொண்டேன் என்கிறார் பாண்டமங்கலம், M.தியாகராஜன்.

--பூண்டை உணவில் சேர்த்துக்கொள்வதால் இரத்தம் அத்திகரிக்கப்படும். இரத்தம் உறைதலை தடுக்கும் புற்றுநோயை ஆரம்பகட்டத்தில் வராமல் தடுக்கும். 20 ஆண்டுகளில் பூண்டு உலக காடுகளில் முக்கிய பொருளாக விளங்கும் என்கிறார் தென்னம்பட்டி, செனந்திரராசு.

முதலில், சுவையான சீன உணவு அரங்கம் நிகழ்ச்சி பற்றிய கருத்துக்கள்.

A: --சீன உணவு அரங்கம் நிகழ்ச்சியில், தயவு செய்து சீன உணவின் பெயரை சீன மொழியில் கூறுங்கள். இந்தியா பொறுத்தவரை மாமிச உணவு சாப்பிடுபவர்களைவிட, சைவ உணவு சாப்பிடுபவர்கள் அதிகம் தான். ஆகவே, சைவ உணவையும் பற்றிக் கூறுங்கள் என்பது என் அன்பான வேண்டுகோள் என்கிறார் அபினிமங்கலம், கே.அருண்.

B:--இந்நிகழ்ச்சி மூலம், சத்துள்ள சீன வகை உணவுகளை தாங்கள் சொல்லும் முறைப்படி தயாரித்து உண்டு வருகின்றேன். வேர்க்கடலை அவியல் நன்றாக உள்ளது. உள்ளூரிலியே கிடைக்கின்ற உணவு பொருட்களை கொண்டு, தயார்க்கப்படும் சீன உணவு எனக்கு மிகவும் பிடித்துள்ளது என்கிறார் ஈரோடு, M.C.பூபதி.

A:--முட்டை இறைச்சி தூள் கொண்டு தயாரிக்கப்பட்ட சூப்பை ரசித்து குடித்ததால் எங்கள் நாக்கை விட்டு அதன் சுவையும் மணமும் மறைய வெகு நேரம் ஆனது. இந்நிகழ்ச்சியின் வாயிலாக, சீநாவின் பிரபல இனிப்பு பலகாரங்களை செய்வது எப்படி? என்பதை அறிய தாருங்களே என்கிறார், செல்லூர், N.சீனிவாசன்.

B:--கேரட் கலந்த இறைச்சி வறுவல் செய்வது பற்றிய செய்முறை விளக்கத்தை கேட்டேன். இந்த சமையலை செய்வதற்கு அதிக எண்ணிக்கையிலான சமையல் பொருள்கள் தேவைப்படும் என்று தெரிகிறது. முடிந்தவரை அனைத்து பொருட்களை குறிப்பு எடுத்துக்கொண்டேன் என்கிறார் S.நாட்டாமங்கலம், A.மாதுராஜ்.