முழுமையான ஜனநாயக உரிமையை திபெத் மக்களுக்கு உண்டு
cri
திபெத் தன்னாட்சி பிரதேசத்தின் பல்வேறு நிலை அரசு வாரியங்களின் பணியாளர்களில் திபெத் உள்ளிட்ட சிறுப்பான்மை தேசிய இன மக்கள் வகிக்கும் விகிதம் 77.97 விழுக்காடாகும். சிறுப்பான்மை தேசிய இன ஊழியர்கள் தன்னாட்சி பிரதேசத்து ஊழியர்களின் முக்கிய பகுதியாக இருக்கின்றனர். சட்டத்தின் நாட்டின் விவகாரங்களை நிர்வகிக்கும் உரிமையையும் சொந்த பிரதேச மற்றும் தேசிய இன விவகாரங்களை நிர்வகிக்கும் தன்னாட்சி உரிமையையும் திபெத் மக்களுக்கு உண்டு. திபெத் தன்னாட்சி பிரதேசத்து தேசிய பேரவை நிரந்தர கமிட்டியின் புள்ளிவிவரம் இதைக் காட்டுகின்றது. 2002ஆம் ஆண்டு, திபெத்தின் தன்னாட்சி பிரதேசம், நகரம், மாவட்டம், வட்டம் ஆகிய 4 நிலை தலைவர்களுக்கான தேர்தலில், 93.09 விழுக்காட்டு வாக்காளர்கள் வாக்களித்தனர் என்று தகவல் காட்டுகின்றது.
|
|