• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-09-17 10:15:13    
மேற்குச் சீனக் குழந்தைகளின் மீதான அக்கறை

cri

சீன மேற்குப் பகுதியில் வாழ்கின்ற மகளிர் மற்றும் குழந்தைகளின் நிலைமையை மேம்படுத்துவதற்கு குழந்தை விவகாரத்துக்குப் பொறுப்பான ஐ.நா நிதியம் மேலும் அதிகமான கவனத்தைச் செலுத்தும். எதிர்காலத்தில் சீன அரசாங்கத்துடனான ஒத்துழைப்பு நிகழ்ச்சிகளில் பெரும்பாலானவை மேற்கு பகுதியில் ஒன்று திரட்டப்படு என்று நிதியத்தின் நிர்வாகத் தலைவர் காலோர் பெலாமி கூறியுள்ளார். அண்மையில் பெய்சிங்கில் சின்குவா செய்தியாளருக்குப் பேட்டியளித்த போது அவர் இவ்வாறு தெரிவித்தார். எங்கள் அக்கறையை மேலும் கூடுதலாக சீனாவின் வறிய குழந்தைகள் மீது செலுத்துகிறோம். அவர்களில் பெரும்பாலோர் மேற்கு பகுதியில் வாழ்கின்றனர் என்று அவர் கூறினார்.

சீனப் பொருளாதார வளர்ச்சியில் மாபெரும் சாதனைகள் படைக்கபட்டுள்ளன. ஆனால் மேற்குப் பகுதியில் நிலவியுள்ள வறியப் பிரச்சினை நீங்கிவிட வில்லை. கிழக்கிற்கும் மேற்கிற்குமிடையிலான இடைவெளி தெளிவானது வேவ்வேறான இடங்களில் வாழ்கின்ற குழந்தைகளின் குடியிருப்பு மற்றும் நலவாழ்வு நிலையில் நிலவும் இடைவெளியைக் குறைக்க சீனாவுக்கு உதவ வேணஅடும் என்று நிதியம் விரும்புகின்றது என்று அவர் தெரிவித்தார்.

இதற்கு முன் திபெத் தன்னாட்சி பிரதேசத்தில் 4 நாள் பயணம் செய்தார். அங்குள்ள மகளிர் மற்றும் குழந்தைகளின் நிலைமை வெகுவாக சீரடைந்துள்ளது. ஆனால் வளர்ந்த கிழக்குபகுதியுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் இன்னும் இடைவெளி உள்ளது என்று அவர் கருத்து தெரிவித்தார்.

கடந்த 5 ஆண்டுகளில் திபெத்தில் மருத்துவ மனையில் குழந்தை பிறப்பு விகிதம் 1 மடங்கு அதிகரித்தது. அது 28 விழுக்காட்டை எட்டியது. ஆனால் 79 விழுக்காடு என்ற நாட்டின் நிலையை விட இது மிக குறைவு. தொடக்க பள்ளியில் சேர்ந்த மாணவரின் விகிதாசாரம் 92 விழுக்காடாடாகும். ஆனால் 31 விழுக்காட்டு குழந்தைகள் மட்டும் 9 ஆண்டு கால கட்டாய கல்வி பெறுகின்றன. 2003ல் நாட்டின் ஏனைய பகுதிகளில் இத்தகைய கல்வி பெறும் மக்கள் தொகை 91.8 விழுக்காட்டை தாணிடியது.

ஐ.நா குழந்தை நிதியம் திபெத்தின் 7 பிரதேங்களின் 21 மாவட்டங்களுடன் ஒத்துழைப்பு கொண்டுள்ளது. அங்குள்ள எங்கள் நிகழ்ச்சிகள் அதிகமாக இல்லை. இருந்தாலும் சிறந்த சோதனை பயன் காணப்பட்டுள்ளது. மகளிர் மற்றும் குழந்தைகளின் நிலைமையைச் சீர்செய்யும் வகையில் மேலும் அதிகமான மேற்குப் பிரதேசத்துடன் எவ்வாறு ஒத்துழைப்பது என்பதற்கு துணை புரிகிறது என்று பெலாமி கூறினார்.

இருந்தாலும் பன்நோக்க முறையில் சீனாவின் முழுமையான நிலைமையைக் கருத்தில் கொண்டு கொள்கையை வகுப்போம். அடுத்த 5 ஆண்டு பணித் திட்டம் பற்றி சீன அரசாங்கத்துடன் விவாதித்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

எதிர்காலத்தில் சீனாவில் பன்நோக்க தன்மை வாய்ந்த ஒத்துழைப்பு நிகழ்ச்சிகளில் குழந்தை நிதியம் ஈடுபடும். குழந்தைகளின் நலவாழ்வு நிகழ்ச்சியை கல்வி நிகழ்ச்சியுடன் ஒன்றிணைக்க வேண்டும். அவர்களின் நலவாழ்வை தாய்மாரின் பாதுகாப்புடன் ஒன்றிணைக்க வேண்டும். ஒட்டுமொத்த பயனைக் வெளிக்கொணர வேண்டும். எடுத்துக்காட்டாக மேலும் கூடுதலான குழந்தைகள் பள்ளியில் சேரத் துணைப் புரியும் அதேவேளையில் பள்ளியின் நலவாழ்வு சூழ்நிலையை மேம்படுத்த வேண்டும். தூய்மையான குடி நீர், கழிப்பறை ஆகியவை போன்ற வசதிகளை அவர்களுக்கு வழங்க செய்ய வேண்டும் என்று பெலாமி கூறினார்.

அதேவேளை/யில் குழந்தை நோய் தடுப்புத் துறையில் சீன அரசாங்கத்துடன் மேலும் கூடுதலாக ஒத்துழைக்க வேண்டும் என நிதியம் விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார். தற்போது பல நிகழ்ச்சிகளின் மையம் குழந்தைகள் நோய்வாய்பட்ட பின் சிகிச்சையளிப்பதில் வைக்கப்படுகின்றது. நோய் தடுப்பு பணி இன்னும் போதாது என்று கண்டறிந்தோம் என்றார் அவர்.

பயணத்தின் போது சீனக் குழந்தை குறிப்பாக வறிய பிரதேசத்தில் வாழ்கின்ற குழந்தைகள் இருக்க வேண்டிய கூறுகளை ஏற்றுகொள்ளும் அளவை உயர்த்துவது பற்றி பெலாமி சீன அரசாங்கத்தின் நலவாழ்வு துறை அமைச்சகத்துடன் விவாதித்தார். நோய் தடுப்பு மற்றும் குழந்தையின் உடல் நிலையை உயர்த்துவதில் முக்கிய நடவடிக்கைகளில் ஒன்றாக நிதியம் சீனாவில் வைட்டமின் ஏயை ஏற்றுக்கொள்ளும் அளவை அதிகரிக்கும் நிகழ்ச்சியை நடைமுறைப்படுத்தியுள்ளது. சீனாவில் நாங்கள் செய்த வேலை உலகின் மற்ற இடங்களுக்கு மேன்மேலும் பெரும் செல்வாக்கு ஏற்படுத்துகின்றது. சீனாவில் 1 விழுக்காகட்டில் சீராக்கம் காணப்பட்டால் அது உலகின் பொது நிலைமையை மாற்ற முடியும் என்று பெலாமி தெரிவித்தார்.