மகளிர் தொழில் முனைவோர் கூட்டம் நிறைவுற்றது
cri
11வது உலக மகளிர் தொழில் முனைவோர் கூட்டம் 18ஆம் நாள் பெய்ஜிங்கில் நிறைவுற்றது. கடந்த 3 நாட்களில் உலகின் 25 நாடுகள் மற்றும் பிரதேசங்களின் பொருளாதார துறையில் 500க்கு அதிகமான தலைசிறந்த மகளிர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு, மகளிர் தொழில் நடத்துவது மற்றும் முழு உலக ஒத்துழைப்பு எனும் தலைப்பைச் சுற்றி வளைந்து விவாதித்தனர். உலகமயமாக்கத்தில் கூட்டாளி உறவை நிறுவுவது, மகளிர் நடத்திய நடுத்தர மற்றும் சிறிய ரக தொழில் நிறுவனங்களின் வளர்ச்சியை முன்னேற்றுவிப்பது, தொழில் நடத்த மகளிரை முன்னேற்றுவிப்பது முதலிய நிகழ்ச்சிகள் பற்றி அவர்கள் விவாதித்துள்ளனர். இதன் மூலம், மகளிர் தொழில் நிறுவனங்களை நடத்தும் போக்கில் பன்னாடுகளின் ஒத்துவைப்பின் தேவையையும் அவசியத்தையும் ஆழமாக அறிந்து கொண்டனர்.
|
|