• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-09-24 15:42:59    
மீத்தேன் வாயு பரவலுக்கான பயிற்சி வகுப்பு

cri

சீனாவின் கிராமப்புறத்தில் 20 கோடிக்கும் அதிகமான விவயாயிகளின்குடும்பங்களில் கழிப்பறை உள்ளது. அதேவேளையில் வளர்ப்பு பிராணிகள் ஆண்டுக்கு 200 கோடி டன் உரம் தருகின்றன. இது சரியாக கையாளப்பட வில்லை. இதனால் விவசாயிகளின் வாழ்க்கைத் தரம் பாதிக்கப்படுகின்றது. நோய், தொற்று நோய் முதலியவை பரவுவதற்கு வழிவகுத்துள்ளது. 2000ம் ஆண்டு முதல் சீன வேளாண் அமைச்சகம் இப்பிரச்சினையில் கவனம் செலுத்தி கிராமப்புறத்தில் மீத்தேன் வாயுவை உருவாக்கும் தொழில் நுட்பத்தைப் பரவலாக்க முயற்சி மேற்கொண்டுள்ளது.

ஹுபேய் மாநிலத்தில் மட்டுமல்ல ஹுநான் மாநிலத்தின் கிராமப்புறத்திலும் மீத்தேன் வாயு மிகவும் வரவேற்கப்படுகின்றது. கடந்த சில ஆண்டுகளில் ஹுநான் மாநிலத்தின் சியெ யான் புறநகரிலுள்ள கிராமப்புறத்தில் மீத்தேன் வாயு தயாரிக்கும் தொழில் நுட்பத்தைப் பரவலாக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. எடுத்துக் காட்டாக மீத்தேன் வாயு கையாளும் தொழில் நுட்ப ஊழியர்களுக்கு பயிற்சியளிப்பது, ஒற்றுமையான உருவரைவில் மீத்தேன் வாயு தேக்கத்தைக் கட்டியமைப்பது, விவசாயிகள் இதைப் பயன்படுத்துவது பற்றிய தகவல் பதிவேடுகளை உருவாக்குவது என்பன இந்நடவடிக்கைகளில் அங்கும். இவற்றின் மூலம் மீத்தேன் வாயு பயன்பாட்டுப் பரவல் விகித அளவை உத்தரவாதம் செய்கின்றது. விவசாயிகள் தாராளமாக இந்த வாயுவைப் பயன்படுத்த துணை புரிகின்றது.

தற்போது சீனாவின் பல்வேறு இடங்களில் மீத்தேன் வாயுவை தயாரிக்கும் தொழில் நுட்பப் பரவலின் மூலம் பன்றிகள் வாயு உற்பத்தி குளத்தின் மேல் வளர்க்கப்படுகின்றன. கோழிகளும் முயல்களும் கூண்டில் வளர்க்கப்படுகின்றன. பழங்களும் காய்கறிகளும் பச்சை நிறத்துடன் விளைகின்றன. இவையனைத்தும் பன்நோக்க உயிரின வாழ்க்கை கட்டமைப்பை உருவாக்கின்றன.
மீத்தேன் வாயு கிராமப்புறத்தில் மட்டுமல்ல பல தொழில் நிறுவனங்களிலும் பரவலாகியுள்ளது. எடுத்துக்காட்டாக சீனாவின் சுச்சியான் மாநிலத்தின் லின் ஆன் நகரில் அமைந்துள்ள சுன் சின் எனும் பெரிய ரக கால்நடை வளர்ப்பு தொழில் நிறுவனம். முன்பு பன்றியிறைச்சியைப் பதனீடு செய்யும் போது பிராணியின் கழிவுப் பொருட்கள் அதன் அருகிலுள்ள நீர்ப் பாசன அமைப்பு, நெல் வயல் ஆகியவற்றை மாசுபடுத்தின. அதேவேளையில் அங்கு வாழ்கின்ற விவசாயிகளின் வாழ்க்கைச் சூழ்ல் சீர்குலைக்கப்பட்டது. இந்த நிலைமையை மாற்றும் வகையில் 2003ம் ஆண்டில் சுன்சி தொழில் நிறுவனம் மீத்தேன் வாயு தயாரிக்கும் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி பன்றி கழிவைத் தூய்மைப்படுத்தியுள்ளது. இந்நிறுவனத்தைப் பார்வையிட்ட எமது செய்தியாளர் இது பற்றி அறிமுகப்படுத்துகிறார்.

தொழில் நிறுவனம் மீத்தேன் வாயு தொழில் நுட்பத்தின் மூலம் கழிவைக் கையாண்டு சமைப்பதற்காக தொழிலாளர்களுக்கு வாயுவை விநியோகித்துள்ளது. வாயு தயாரிப்பின் விளைந்த உரத்தை அருகிலுள்ள கிராமப்புறத்தில் வாழும் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கியுள்ளது. அவற்றைப் பயன்படுத்தி விளைநிலத்தை சீர்செய்து அமோக அறுவடை செய்யலாம். என்றார் அவர்.
2003ம் ஆண்டின் இறுதிவரை சீனாவின் செச்சியான் மாநிலத்தில் பெரிய மற்றும் நடுத்தர மீத்தேன் வாயு தயாரிக்கும் திட்டப் பணிகளின் எண்ணிக்கை 200க்கும் அதிகமாகும். ஆண்டுக்கு 28 லட்சம் டன் எடையுள்ள கால்நடைக் கழிவு கையாளப்பட்டுள்ளது. 52 லட்சம் கன மீட்டர் மீத்தேன் வாயு உற்பத்தி செய்யப்படுகின்றது. கால்நடை மற்றும் வீட்டு வளர்ப்புப் போக்கில் மாசற்ற, மூலவளமயமாக்க, சீர்கேட்டைக் கட்டுப்படுத்த வல்ல புதிய வழிமுறை உருவாகியுள்ளது.