• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-09-23 17:47:48    
நேயர்களின் கருத்துக்கள் 20

cri
அடுத்து, சீன மகளிர் நிகழ்ச்சி மற்றும் அறிவியல் உலகம் நிகழ்ச்சி பற்றி, நேயர்களின் கருத்துக்கள் இதோ.

B:--மகளிர் நிகழ்ச்சியில், 83 வயதாகும் ஜான்லிங் அம்மையாரை பற்றி விரிவாக அறிந்து கொண்டோம். இவரது திறமையை அறிந்து வியந்தோம். தன்னம்பிக்கைக்கு இவர் ஓர் எடுத்துக்காட்டு வயதானாலும் தோல்வியைக் கண்டு கைவிடாமல் மேலும் மேலும் பயற்சி பெற்று இறுதியில் வெற்றி பெற்று ஒரு பிரபலமாக மாறியது பாராட்டத்தக்கது என்கிறார், மீனாட்சி பாளையம், K.அருண்.

A:--சீன மகளிர் நிகழ்ச்சியில், மங்கோலியப் பாடகி பற்றியும் அவர் பாடிய பாடல்களைப் பற்றியும் விரிவாக அறிந்து கொண்டேன். அவர்கள் பாடிய காட்டு வாத்து எனும் பாடலின் சில வரிகள் கேட்பதற்கு இனிமையாக இருந்தது. சீன மகளிரின் திறமையையும், சாதனைகளையும் எடு்ததுக்காட்டும் இது போன்ற நிகழ்ச்சிகளை வரவேற்கிறோம் என்கிறார் பாரதிபுரம், J.உதயகுமார்.

B:--அறிவியல் உலகம் நிகழ்ச்சியில், புற்று நோயை கண்டறியும் புதிய சோதனை முறை, கழுத்தில் புற்றுநோய் இதனை தடுக்கும் முறை ஆகியவை பற்றியும் பாதுகாப்பான சூரிய ஒளி மூலம் வைட்டமின் D, உடலில் சேமிக்கப்படுவது மற்றும் ஆழ்கடலில் 1000 மீட்டர் ஆழத்திலும் படம் பிடித்தல் பற்றிய தொழில் நுட்பம் பற்றியும் அறிய முடிந்தது என்கிறார் பரசலூர் P.S.சேகர்.

A:--அல்ஷிமர் நோய் பற்றியும் இந்த வோய்க்கு பலியான முன்னாள் அமெரிக்க அதிபர் ரீகின் அல்ஷிமர் நோயால் பாதிக்கப்பட்டது பற்றியும் அமெரிக்காவில் 40 லட்சம் பேர் இந்த நோய்க்கு உள்ளாகியுள்ளார் என்பதும். இந்த அல்ஷிமர் நோய் நினைவாற்றலை குறைத்து விடும் என்பதை அறிந்தேன் என்கிறார், பரசலூர், S.உத்தமசீலன்.

B:இனி, எமது ஒலிபரப்பு பற்றி, நேயர்களின் பல்வேறு கருத்துக்களை கேளுங்கள்.

A: --கடந்த 15 ஆண்டுகளாக சீன வானொலியைக் கேட்டு, அது வழங்கி வரும் பல்வேறு இதழ்களைப் படித்து வருகின்றேன். சீன அரசின் கொள்கை, எனக்கு மிகவும் பிடிக்கும். அது கடைப்பிடித்துவரும் வாழ்வுரிமை, வளர்ச்சி உரிமையை அடிப்படையாகக் கொண்ட அதன் மனித உரிமைக் கொள்கை மிகவும் சிறப்பாக உள்ளது என்கிறார் மணமேடு, M.தேவராஜா.

B:--மலர்ச்சோலை நிகழ்ச்சியில், உலக சுற்று சூழல் தினம் பற்றிய பல சுவையான தகவல்களை அறிய தந்தீர்கள். உலக சுற்று சூழல்களால் பாதிக்கப்படுவதற்கு காரணம் மனிதன் தான். நீர், நிலம் காற்று ஆகியவற்றை, மனிதன் தான் வாழ்வதற்காக மாசுப்படுத்துகின்றான். இதை ஒவ்வொருவரும் புரிந்துகொண்டு சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்கிறார் ஈரோடு, M.C.பூபதி.

A:--தமிழ்ப்பிரிவுக்கு நேயர்கடிதம் மற்றும் போட்டி விடைத்தாட்கள் இரு கணகள் போன்றது. இவற்றின் மூலம், தமிழ்ப் பிரிவின் வளர்ச்சியை அறிந்து கொள்ளலாம். இவ்வாண்டில், மறற பிரிவைக்காட்டிலும் நாம் முதன்மை பெற வேண்டுமானால் மூன்று லட்சத்துக்கும் அதிகமான கடிதங்கள் தமிழ்ப்பிரிவுக்கு அனுப்ப வேண்டும் என்கிறார் முனுகப்பட்டு, P.கண்ணன்சேகர்.

B:--சமூக வாழ்வு நிகழ்ச்சியில், பெண்டா என்ற விலங்கு பற்றி கூறப்பட்டது. இந்த விலங்கு உலக மக்களால் விரும்பப்படுகின்றது. இது பல நாட்டிற்கு ஏற்றுமதி செய்கின்றது. இந்த நிகழ்ச்சி மூலம், பெண்டாவை அறிந்து கொண்டேன். பயனுள்ளதாக அமைந்தது என்கிறார் செஞ்சி, P.வின்சென்ட்.

A:--தமிழ் ஒலி இதழில், சீன மொழியை கற்றுக்கொள்ள சிறு பகுதியை ஒதுக்கலாம். தமிழ் மூலம் சீனம் கேட்கும் போது, உச்சரிப்பு மட்டும் கேட்டால் புரியவில்லை. எழுத்து பார்த்தால், தமிழ் மூலம் சீனம் கற்கும் போது, மிகவும் எளிதாக புரியும் என நம்புகிறேன் என்கிறார் வெண்ணந்தூர், K.மணிவர்மன்.