கடந்த சில ஆண்டுகளில் திபெத் தன்னாட்சி பிரதேசத்தில் அடிப்படை வசதியின் கட்டுமானத்துக்கான முதலீடு அதிகரித்து வருகின்றது. முதலீட்டு சூழ்நிலை தெளிவாக மேம்பட்டுள்ளது. அதிகமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் திபெத் சந்தையில் நுழைந்துள்ளனர்.
1984ஆம் ஆண்டு முதல், 2004ஆம் ஆண்டு வரை, திபெத்துக்கு உதவிடும் 222 முக்கிய திட்டப்பணிகளை நடுவண் அரசு வகுத்துள்ளது. மொத்த முதலீட்டுத் தொகை 3640 கோடி யுவானைத் தாண்டியுள்ளது. இந்தப் திட்டப்பணிகின் நடைமுறையாக்கம், திபெத்தின் வேளாண் மற்றும் கால்நடை வளர்ப்பு, போக்குவரத்து, எரியாற்றல், செய்தித் தொடர்பு ஆகிய அடிப்படை வசதிகளைத் தெளிவாக சீராக்கியுள்ளது.
தற்போது, நேபாளம், ஜப்பான், அமெரிக்கா, பிரிட்டன், தென் கொரியா முதலிய நாடுகள் மற்றும் பிரதேசங்களின் வணிகர்கள் திபெத்தில் முதலீடு செய்கின்றனர்.
|