• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-09-28 09:26:03    
நேயர்களின் கருத்துக்கள் 21

cri
முதலில் எமது ஒலிபரப்புக்கு உதவி அளிக்கும் நேயர்களுக்கு பாராட்டுக்கள் நன்றிகள். நேயர்களுடன் இணைந்து தயாரிக்கும் நிகழ்ச்சிகள் வரவேற்கப்பட்டன. அது பற்றிய கருத்துக்கள் கேளுங்கள்.

A:--திருச்சி அன்னாநகர், V.T.ரவிச்சிந்தரன், நேருக்கு நேர் நிகழ்ச்சி மூலமாக, கூறிய கருத்து சரிதான். நேயர் நேரம் நிகழ்ச்சியில், 15 பெயர்களாவது வாசித்தால் தான், ஒரு நேயருக்கு சீன வானொலி கேட்டு எழுத உற்சாகம் வரும் என்பது, அவரின் கூற்று படி மட்டுமல்ல, எனது எண்ணப்படியும் சரி தான், என்கிறார் ஸ்ரீரங்கம், எஸ்.ரங்கன்.

B:--நேயர் கடிதம் நிகழ்ச்சியில், எங்களின் கடிதம் மற்றும் மின்னஞ்சல் தங்களை வந்தடைந்ததன் விவரம் அறியப்பெற்றோம் நன்றிகள் பல. இதே போல், நேயர் நேரம் நிகழ்ச்சியிலும் எங்களின் மடல்கள் இடம் பிடித்தால் எல்லை இல்லா மகிழ்ச்சி அடைவோம் என்கிறார் N.சீனிவாசன்.

A:--நேயர் நேரம் நிகழ்ச்சியில், அதிகமான இலங்கை நேயர்களின் மடல்கள் இடம்பெற கேட்டு, மிக்க மகிழ்ச்சியடைந்தேன். இலங்கையில், சீன வானொலியை செவிமடுக்கும் நேயர்களின் தொகை நாளுக்கு நாள் அதிகரிப்பதை இம்மடல்களின் வாயிலாக அறிந்து கொள்ள முடிந்தது. இவ்வாண்டு மேலும் புதிய நேயர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என நம்புகிறேன் என்கிறார் இலங்கை கிணிகத்தேனை, இந்திரா மகேந்திரன்.

B:--அதிக நேயர்கள் வான் அஞ்சல் மூலம் அனுப்பும் நல்ல தரமான கடிதம் இடம் பெறும், நேயர் நேரம் நிகழ்ச்சியின் நேரத்தை அதிகரிக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என்கிறார் தார்வழி P.முத்து.

A:--நேயர் விருப்பம் நிகழ்ச்சி மூலம், தமிழ்திரைப்பட பாடல்கள் நீண்ட இடைவொளிக்கு பிற்கு சீன வானொலியில் மீண்டும் ஒலிபரப்பு ஆகிறது மிக்க மகிழ்ச்சி. நேயர்களின் பிறந்தநாள், திருமணநாள் வாழ்த்துக்களையும் அதிக கடிதம் எழுதுபவர்களின் பெயர்களையும் வாசிப்பது, வரவேற்கத்தக்கது என்கிறார் சேந்தமங்கலம், எஸ்.எம்.ரவிச்சிந்திரன்.

B: இப்போது, நேயர் கடிதம், நேயர் நேரம் உள்ளிட்ட எங்களுக்கு பிடிக்குமான நிகழ்ச்சிகளின் நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. தவிர, நேயர் விருப்பம் எனும் நிகழ்ச்சியும் மீண்டும் துவங்கியுள்ளது.

A: மலர்சோலை நிகழ்ச்சி பற்றிய அதிகமான கடிதங்கள் கிடைக்கப்பெற்றோம்.

B: --இதில் காவலுக்கு உதவியாக பயன்படும் அறிவியல் செய்திகளை கேட்டேன். இதைப் போன்ற மலர்சோலை நிகழ்ச்சியை எதிர்பார்கிறோம் என்கிறார் விசுவநாதபுரம், எஸ்.இரமேசு.

A: --இதில் ஒலிபரப்பான குழந்தைகள் நாள் பற்றிய கட்டுரை சிறப்பாக இருந்தது. எதிர்கால சிற்பிகளான இன்றைய குழந்தைகள் மனித நேயமும், முற்போக்கு எண்ணங்களும் படைப்பாற்றல் திறனும் மிக்கவர்களாக வளர வேண்டும் என்பதே, எனது கருத்து என்கிறார், மதுரை, எஸ்.திருநாவுக்கரசு.

B: --உழைப்பாளர் நாள் எனும் சிறப்பு நிகழ்ச்சியின் மூலம், மே நாள் எவ்வாறு உருவானது என்பதை அறிந்துக்கொள்ள முடிந்தது. 1886ம் ஆண்டு தோன்றிய இந்நாள் உலகில் அனைத்து நாடுகளில் கொண்டாடப்படும். இந்த மே தினத்தை பற்றி, மலர் சோலை நிகழ்ச்சிக்கு என் மனமார்ந்த நன்றிகள், என்கிறார் 30 பள்ளிப்பட்டி, P.R.சுப்ரமணியன்.

A:--இதில், குழந்தைகளுக்கு நன்மை பயக்கும் வகையில் தகவல்கள் அமைந்தன. 1925ல் நடைபெற்ற ஜெனிவா குழந்தைகள் மாநாட்டில், குழந்தைகளுக்கு ஏற்படும் தீங்கு, வளர்ப்பு, உரிய வசதிகள் தீர்மானிக்கப்பட்டது. சீன நாட்டில் குழந்தைகள் நாள் உருவான ஆண்டை தெரியவைத்தமைக்கு நன்றி என்கிறார், எஸ்.நாட்டாமங்கலம், வி.இராமகிருஷ்ணன்.

B:--உணவு பாதுகாப்பு மற்றும் புளுகளின் பயன் என்ற தலைப்புகளில் அதிகமான பயனுள்ள தகவல்களைக் கேட்டேன் என்கிறார் ஆரணி, மீரா கண்ணன்.

A: விளையாட்டு செய்திகளில், உலகளாவிய விளையாட்டுப் போட்டியின் விளைவு வெகுவிரைவாக ஒலிபரப்பப்படுவதை, நேயர்கள் விரும்புகின்றனர்.

B:--இதில் பலவித விளையாட்டுப் போட்டிகளை பற்றியும் கூறினீர்கள். பல நாடுகள் கால்பந்துப் போட்டியையும் கலந்துக்கொண்ட அணிகள், வெற்றிப்பெற்ற அணிகள் பற்றியும் விளக்கமாக தெளிவாக கூறினீர்கள். கிரிக்கேட் போட்டியில் கலந்து கொண்ட நாடுகளையும் அணிகளையும் வெற்றிப்பெற்ற அணிகளையும் பாகிஸ்தான் கிரிக்கேட் அணியில் மாற்றம் ஏற்பட்டுள்ளதையும் கூறியதைக் கேட்டேன் என்கிறார் ஸ்ரீரங்கம், M.R.கண்ணபிரான்நாயுடு.

A:--ஐரோப்பிய கால்பந்து சாம்பியன் போட்டியில், A.B.C.D. அணிகளில் வெற்றிப்பெற்ற நாடுகள், டிராலில் முடிந்த நாடுகள் மற்றும் தோல்லியை தழுவிய ரஷ்யா நாடு திரும்பபேண்டியது தான் என்ற விபரங்களை விரைவாக தந்த கடிகாசலம் அவர்களுக்கு நன்றி என்கிறார் பரசலூர், P.S.சேகர்.