தென்மேற்கு சீனாவிலுள்ள GUI ZHOU மாநிலத்தின் சுற்றுலா மூலவளம், எழில் மிக்கது. கடந்த சில ஆண்டுகளில், சுற்றுலா துறையை, பொருளாதார வளர்ச்சியின் முதுகெலும்பாக GUI ZHOU, கொண்டது. சுற்றுலா துறையை வளர்ச்சியுறச்செய்வதோடு, சுற்றுலா மூலவள பாதுகாப்பை வலுப்படுத்தியுள்ளது.
சுமார் லட்சத்து 70 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவுடைய இம்மாநிலத்தில், 30 விழுக்காடு காடாகும். மியெள, துன் உள்ளிட்ட 48 சிறுபான்மை தேசிய இனங்கள், தலைமுறை தலைமுறையாக இங்கு வாழ்கின்றன. சீரான உயிரின வாழ்க்கை சூழல், சிறந்த தேசிய இன பண்பாடு ஆகியவை, சுற்றுலா துறையின் வளர்ச்சிக்கு இங்கு மாபெரும் உள்ளார்ந்த ஆற்றலை வழங்கியுள்ளன.
தென்கிழக்கு GUIZHOU விலுள்ள மியெள மற்றும் துன் இன தன்னாட்சி செள, சுற்றுலா மூலவளம் எழில் மிக்க பிரதேசங்களில் ஒன்றாகும். அதன் துணை தலைவர் LI ZAIYONG, செய்திமுகவரிடம் பேசுகையில், பிற இடங்களை விட, சுற்றுலா வளர்ச்சியில், இத்தன்னாட்சி செளவின் பல தனிச்சிறப்பியல்புகளை விளக்கிக்கூறினார்.
இத்தன்னாட்சிசெளவின் 40 லட்சம் மக்கள் தொகையில், மியெள, துன் உள்ளிட்ட சிறுப்பான்மை தேசிய இன மக்கள் தொகை, 80 விழுக்காடு வகிக்கின்றனர். அவர்கள் ஆடல்பாடலில் தேர்ச்சி பெற்றவர் ஆவர். தேசிய இன விழாக்கள் அதிகமாகும். இதனால், ஆடல்பாடல் செள, நூறு விழா கொண்ட செள என, இது அழைக்கப்படுகிறது. தவிர, யூனெஸ்கோ பரிந்துரைத்த "பத்து இயற்கை மாறாத" சுற்றுலா இடங்களில், ஒன்றாகவும், சர்வதேச கிராமப்புற பண்பாட்டு நிதியம் உறுதிப்படுத்திய 16 பாதுகாப்பு தளங்களில் ஒன்றாகவும், இது விளங்குகிறது.
சுற்றுலா மூலவளத்தை வளர்ச்சியுறச்செய்வதில், வளர்ச்சிக்கு பின், பாதுகாப்பு எனும் பாரம்பரிய வழிமுறையை உள்ளூரின் அரசு பில்பற்ற வில்லை. பாதுகாப்பு, வளர்ச்சி, நலன் ஆகியவற்றை ஒன்றிணைத்து, தொடரவல்ல வளர்ச்சி வழிமுறையை மேற்கொண்டது. LI ZAIYONG, இது பற்றி கூறியதாவது.
மூலவளத்தை பார்த்தால் முதலில், பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கிறோம். சிறுப்பான்மைத் தேசிய இன கிராமத்துக்கான பாதுகாப்பு விதிப்புகளை, வகுத்துள்ளோம். இரண்டாவது, சிறுப்பான்மைத் தேசிய இன பண்பாட்டைக் காட்டாற்ற வேண்டும் என்றார் அவர்.
வேகமாக வளர்ந்து வரும் சுற்றுலா சந்தைக்கு ஏற்ப, மூலவளத்தை சீர்க்குலைக்காமல் தவிர்த்து, பயணிகளின் வேறுபட்ட கோரிக்கைகளை நிறைவு செய்யும் வகையில், உள்ளுர் அரசு, 2 சுற்றுலா நெறிகளை உருவளரந்துள்ளது. ஒன்று, உள்நாட்டு பயணிகளை வரவேற்கும் இயற்கை காட்சி நெறியாகும். இன்னொன்று, வெளிநாட்டு பயணிகளுக்கான, சிறுபான்மை தேசிய இன பண்பாட்டை முக்கியமாக கொண்ட நெறியாகும். சுற்றுலா மூலவளத்தை பயன் தரும் முறையில் பாதுகாப்பதால், கடந்த சில ஆண்டுகளில், இப்பிரதேசம், மேம்மேலும் அதிகமான பயணிகளை ஈர்த்துள்ளது. கடந்த ஆண்டில், சுற்றுலா மூலம் மட்டும், இத்தன்னாட்சி செளவுக்கு கிடைத்த மொத்த வருமானம், 50 கோடி யுவானை தாண்டியுள்ளது.
|