• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-10-11 16:20:18    
ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி

cri

ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி ஏதன்ஸில் 12வது ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் கலந்துகொண்ட சீனப் பிரதிநிதிக்குழு செப்டம்பர் 30ந் நாள் பெய்சிங் திரும்பியது. இப் போட்டியில் மொத்தம் 136 நாடுகள் மற்றும் பிரதேசங்களின் பிரதிநிதிக் குழுக்கள் கலந்துகொண்டன. சீனப் பிரதிநிதிக் குழு 63 தங்கம் உள்ளிட்ட 141 பதக்கங்களை பெற்று முதலிடம் வகிக்கின்றது. அன்று ஊனமுற்றோர் ஒலிம்பிக் கொடியும் பெய்சிங் வந்துள்ளது. 4 ஆண்டுகளுக்குப் பின், 13வது ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி பெய்சிங்கில் நடைபெறும் என்று குறிப்பிடத்தக்கது.

மராதன் அக்டோபர் திங்கள் 3ந் நாள் இந்தியாவின் புதுதில்லியில் நடைபெற்ற அரை தூர உலக மராதன் சாம்பியன் பட்டப் போட்டியில் சீன வீராங்கனை சுன் யிங் ஜெ ஒரு மணி எட்டு நிமிடம் 40 வினாடியில் 21.1 கிலோமீட்டர் தூரத்தை ஓடிமுடித்து சாம்பியன் பட்டம் பெற்றார். தென்னிஸ் W T A எனும் மகளிர் தொழில் தென்னிஸ் சங்கத்தின் குவாங்சோ ஒப்பன் போட்டி அக்டோபர் திங்கள் 3ந் நாள் நிறைவடைந்தது. ஒற்றையர் போட்டியில் சீன வீராங்கனை லீ நா 2-0 என்ற செட் கணக்கில் எதிரணியினரைத் தோற்கடித்து முதலாவது W T A சுற்றுப் போட்டியின் ஒற்றையர் போட்டி சாம்பியன் பட்டம் பெற்றார். ஒலிம்பிக் சாம்பியன்களான லீ திங்-சுன் தியன் தியன் ஜோடி இரட்டையர் போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்றனர். 2004ஆம் ஆண்டுக்கான ஷாங்கை சிலி தென்னிஸ் ஒப்பன் போட்டி அக்டோபர் 3ந் நாள் நிறைவடைந்தது. ஆடவருக்கான ஒற்றையர் போட்டியில் ஆர்ஜென்டின வீரர் CANAS 2-0 என்ற செட் கணக்கில் ஜெர்மன் வீரர் BURGSMULLERஐத் தோற்கடித்து சாம்பியன்பட்டம் பெற்றார்.

கால்பந்து மலேசியாவில் நடைபெற்றுவரும் 2004ஆம் ஆண்டுக்கான ஆசிய U20 இளைஞர் கால்பந்து போட்டியின் காலிறுதிப் போட்டி ஆக்டோபர் 3ந் நாள் முடிவடைந்தது. சீன அணி 3-0 என்ற கோல் கணக்கில் உபசரிப்பு நாடான மலேசிய அணியைத் தோற்கடித்தது. இரை இறுதிப் போட்டியில் கலந்துகொள்ள தகுதி பெற்றது. இதன் விளைவாக, அடுத்த ஆண்டு நெதர்லாந்தில் நடைபெறும் உலகி இளைஞர் கால்பந்து சாம்பியன் பட்டப் போட்டியில் கலந்துகொள்ளும் தகுதியும் சீன அணி பெற்றுள்ளது. ஈராக்-சிரிய போட்டியில் வெற்ற பெற்ற அணி, அரை இறுதிப் போட்டியில் சீன அணியுடன் மோதும். பூப்பந்து உலக பூப்பந்து விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனை பெயர் பட்டியலை சர்வதேச பூப்பந்து சம்மேளனம் செப்டம்பர் 30ந் நாள் வெளியிட்டது. ஏதன்ஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் ஒற்றையர் சாம்பியன் பட்டம் பெற்ற சீன வீராங்கனை சாங் நிங் முதலிடம் வகிக்கின்றார். ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்ற சீன வீராங்கனைகளான யாங் வெய், சாங் சியே வென் ஜோடி மகளிருக்கான இரட்டையர் பட்டியலில் முதலிடம் வகிக்கின்றனர். ஆடவருக்கான ஒற்றையர் பட்டியலில், சீன வீரர் லின் தான் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். ஆடவருக்கான இரட்டையர் பட்டியலில் தென் கொரிய வீரர்கள் முதலிடம் வகிக்கின்றனர். கைப் பந்து 12வது ஆசிய இளைஞர் மகளிர் கைப்பந்து சாம்பியன் பட்ட போட்டி செப்டம்பர் 29ந் நாள் இலங்கையில் நிறைவடைந்தது. சீன அணி 3-0 என்ற செட் கணக்கில் ஜப்பானிய அணியைத் தோற்கடித்து 6வது முறையாக சாம்பியன் பட்டம் பெற்றது.